தமிழகத்தில் பரவலாக மழை, இன்றும் தொடர வாய்ப்பு

தமிழகத்தில் நேற்று பரவலாக மழை பெய்தது. குறிப்பாக உட்புற பகுதிகளில் சில இடங்களில் பலத்த மழை பதிவாகியது.  கிருஷ்ணகிரி, திருச்சி, விழுப்புரம், தர்மபுரி, நாமக்கல் ஆகிய மாவட்டங்களில் இந்த மழை மிக பரவலாக நிலவியது. சென்னை மற்றும் மதுரைக்கு தெற்கே உள்ள பகுதிகளில் மாத்திரமே நேற்று குறிப்பிடும்படியான மழை எதுவும் பதிவு ஆகவில்லை.

Weather_Update

இன்றும் தமிழகத்தில் பரவலாக மழை பெய்ய கூடும் என வானிலை படிவங்கள் கணிக்கின்றன. நேற்று போல் இன்றும் உட்புற பகுதிகளில் மழைக்கான வாய்ப்பு அதிகம் என கூறலாம். தென் இந்தியாவின் உட்புற பகுதிகளில் இன்று வளிமண்டலத்தில் நிலையற்ற தன்மை உருவாக வாய்ப்பு உள்ளதாலும் காற்று குவியல் ஏற்பட வாய்ப்பு உள்ளதாலும் தென் உட்புற கர்நாடக மற்றும் ராயலசீமா பகுதிகளில் ஒரு சில இடங்களில் பலத்த இடி மழை பெய்ய கூடும்.

Weather_Update_1

இதே போல் வடக்கு மற்றும் வடமேற்கு உட்புற தமிழக பகுதிகளில் ஓரிரு இடங்களில் பலத்த மழை பெய்ய கூடும்.  வடக்கு கடலோர பகுதிகளில் காற்றின் திசை சற்று எதுவாக நிலவாது என வானிலை படிவங்கள் கணிக்கின்றன இதன் காரணமாக சென்னை போன்ற கடலோர பகுதிகளில் மழை பெய்ய வாய்ப்பு சற்று குறைந்து காணப்படும்.