தமிழகத்தில் மழை குறைய வாய்ப்பு

நேற்று  வட தமிழகத்தில் பல பகுதிகளில் மாலை இடியுடன் கூடிய பலத்த மழை பெய்தது.  சென்னையின் மேற்கு மற்றும் வடக்கு பகுதிகளில் சூறாவளி காற்றுடன் 15-20 நிமிடங்கள் மழை பெய்தது.

கடந்த சில தினங்களாக வட தமிழகத்தில் பெய்து வந்த மழை படி படியாக குறைய கூடும். கிழக்கு இந்தியாவில் நிலவி வந்த ஆழ்ந்த காற்று அழுத்த தாழ்வு மண்டலம் சற்றே வடக்கு கிழக்கில் நகர்ந்து தற்பொழுது வட வங்காள விரிகுடா பகுதியில் நிலை கொண்டுள்ளது. இதன் காரணமாக தென் இந்தியாவின் உட்புற பகுதிகளில் இருந்த மேல் அடுக்கு ஈர காற்றின் ஈீர்ப்பு குறைய தொடங்கி உள்ளது

Weather_map_Tamil

மேலும் தென் இந்தியாவின் மேற்கு பகுதியில் தென் மேற்கு பருவ மழை இன்னும் ஓரிரு நாட்களில் மீண்டும் வலு பெறக்கூடும், வலுவான பருவ காற்று நிலவும் பொழுது கிழக்கு பகுதிகளில் மழை வாய்ப்பு குறைந்தே காணப்படும்.