தமிழகத்தில் வெப்ப நிலை சராசரி அளவை விட அதிகரித்து காணப்படும்

தமிழகத்தில் கடந்த ஓர் வாரமாக வறண்ட வானிலை நீடித்து வந்த போதிலும் வெப்ப நிலை சற்று மிதப்பட்டே நிலவி வந்தது.  இந்நிலையில் நேற்று பரவலாக வெப்ப நிலையில் ஓர் உயர்வு தெரிந்தது, சென்னையில் கிட்டத்தட்ட இரு வாரங்களுக்கு பின் பகல் நேர வெப்ப நிலை நுங்கம்பாக்கம் மற்றும் மீனம்பாக்கம் ஆகிய இரு இடங்களிலும் 37 டிகிரி அளவை தாண்டியது.  இது சராசரி வெப்ப நிலையை விட இரு டிகிரிக்கும் மேல் அதிகம் ஆகும்.

Weather_Update

இன்றும் இதே போல் தமிழகத்தில் வெப்ப நிலை சராசரி அளவை விட அதிகரித்து காண வாய்ப்பு உள்ளதாக வானிலை படிவங்கள் கணிக்கின்றன. கடந்த ஓர் வாரமாக மேற்கத்திய தரை காற்று வீரியம் அதிகம் உள்ளத்தால் கடற்காற்று உருவாக வாய்ப்பு இல்லாமல் நிலவி வந்தது.  இன்று மாலை நேரம் கடற்காற்று வீச வாய்ப்பு உள்ளது என வானிலை படிவங்கள் கணிப்பதால் மாலை நேரத்தில் வெப்ப நிலை குறைய கூடும்.

இதே போல் கடலோர பகுதிகளில் கடற்காற்றின் ஊடுருவல் காரணமாக ஏற்படும் சலனம் ஓரிரு இடங்களில் இடி மேகங்களை உருவாக்க கூடும்.  பரவலான மழைக்கான வாய்ப்பு குறைவு என்றாலும் சில இடங்களில் சற்றே மிதமான மழை சில நிமிடங்கள் பெய்ய கூடும்.