தென்மேற்கு பருவ மழை தமிழக மழை அளவு ஓர் தொகுப்பு

நீண்ட இடைவெளிக்கு பிறகு தமிழ் வானிலை வலை பதிவை மீண்டும் இன்று துவங்குகிறோம்.  இடைவெளிக்கு வருந்துகிறோம்.  எதிர் வரும் வடகிழக்கு பருவ மழை காலத்தின் பொழுது தமிழில் வானிலை பதிவுகளை தினமும் பதிவு செய்ய இயன்றவரை செய்வோம்.

இதுவரை தமிழகத்தில் தென்மேற்கு பருவ மழை எவ்வாறு பதிவாகி உள்ளது என்பதை மாவட்ட வாரியாக ஓர் தொகுப்பாக கொடுத்துள்ளோம்.   நேற்று வரை தென்மேற்கு    பருவ மழை தமிழகத்தில் சராசரி அளவை விட 21% அளவிற்கு குறைந்து பதிவாகியுள்ளது. இந்த ஆண்டு தென்மேற்கு பருவ மழை காலம் தமிழகத்தை பொறுத்த வரை பற்றாக்குறை ஆண்டு என கொள்ளலாம். இதே போல் புதுவையிலும் பட்ற்றக்குறை அளவே பதிவாகியுள்ளது.

பதிவில் சராசரி அளவு மற்றும் பதிவான மழை அளவு இடம் மாறி உள்ளது.  பிழைக்கு வருந்துகிறோம். 

weather_update_2

தென் தமிழக பகுதிகளில் இந்த ஆண்டு தென்மேற்கு பருவ மழை மிகவும் குறைந்து பதிவாகியுள்ளது. தேனி மாவட்டம் மட்டுமே இந்த ஆண்டில் இயல்பான மழை அளவு பதிவாகியுள்ளது. ஏனைய அணைத்து மாவட்டங்களில் பற்றாக்குறை நிலை உருவாகி உள்ளது.  குறிப்பாக கேரளாவை போல் கன்னியாகுமரி மாவட்டத்திலும் இந்த ஆண்டு தென்மேற்கு பருவ மழை பொய்த்து விட்டது.

weather_update_1

மத்திய தமிழகத்திலும் பல மாவட்டங்களில் மழை அளவு குறைந்தே பெய்து உள்ளது.  கோவை மாவட்டம் மற்றும் சிவகங்கை மாவட்டம் மாத்திரமே சராசரி அளவை காட்டிலும் மிகுதியாக மழை பெய்த மாவட்டங்கள் ஆகும்.  டெல்டா மாவட்ட பகுதிகளில் சராசரி அளவை காட்டிலும் சற்று குறைந்தே மழை பெய்து உள்ளது.

weather_update

தமிழகத்தில் வட பகுதிகளில் மாத்திரமே பல மாவட்டங்களில் மழை இயல்பான அளவிற்கு பெய்து உள்ளது.  இயல்பான மழை அளவு பெய்து உள்ள போதிலும் அணைத்து மாவட்டங்களும் சராசரி அளவை காட்டிலும் குறைந்தே பெய்து உள்ளது.

weather_update_3

கன்னியாகுமரி போல் நீலகிரி மாவட்டமும் தென்மேற்கு பருவ மழை காலத்தில் நல்ல மழை பெய்யும் மாவட்டம் ஆகும்.  இந்த ஆண்டு இந்த இரு மாவட்டங்களும் பற்றாக்குறை மழை அளவை சந்தித்து உள்ளது.