டெல்டா மாவட்ட பகுதிகளில் பரவலான மழை பதிவு

நேற்று தமிழகத்தின் பல பகுதிகளில் மிதமான மழை பதிவாகியது.  கடந்த இரு தினங்களாக வட தமிழக பகுதிகளில் நல்ல மழை பெய்து வந்த நிலையில் நேற்று மேற்கு உட்புற பகுதிகள் மற்றும் டெல்டா மாவட்ட பகுதிகளிலும் பரவலான மழை பெய்தது.

குறிப்பாக தஞ்சாவூர், திருச்சி மற்றும் திருவாரூர் மாவட்டங்களில் சில இடங்களில் சற்றே கனத்த மழை பதிவாகியது.  தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள அம்மாபேட்டை பகுதியில் 45 மிமீ அளவு மழை பொழிந்தது.

weather_update

வட தமிழகத்தில் சென்னையில் ஒரு சில இடங்களில் சாரல் மழை பெய்த போதிலும் மழை மேகங்கள் தாம்பரம் மற்றும் அதற்கு தெற்கில் உள்ள புறநகர் பகுதிகளில்தான் அதிகம் சென்றது.  செங்கல்பட்டு, மகாபலிபுரம் போன்ற பகுதிகளில் நேற்று மாலை வேலை நல்ல மழை பெய்தது.

இன்று தமிழகத்தில் வானம் சற்றே மேக மூட்டமாக இருக்க கூடும் என வானிலை படிவங்கள் கணிக்கின்றன. இதன் காரணமாக வட தமிழக பகுதிகளில் வெப்ப நிலை 34 டிகிரி அளவிற்கு பகல் பொழுதில் உயர கூடும்.  இதன் காரணமாக கடல் காற்று சற்று தாமதம் அடைய கூடும்.  மேலும் வளிமண்டலத்தில் சற்றே ஸ்திரமான நிலை இருக்க கூடும் என்பதால் மழைக்கான வாய்ப்பு சற்று குறைந்து காணபடுகிறது.  எனினும்க டலோர பகுதிகளில் ஓரிரு இடங்களில் மழை பெய்ய கூடும். இது பரவலாக பெய்ய வாய்ப்பு சற்று குறைவே.