தென்மேற்கு பருவமழை தொய்வான விலகல்

தென்மேற்கு பருவ மழை இந்திய துணை கண்டத்தில் இருந்து மிகவும் நிதானமாக விலகி வருகிறது.  இன்றைய நிலையில் ராஜஸ்தான், பஞ்சாப், காஷ்மீர் போன்ற வடமேற்கு மாநிலங்களில் மாத்திரமே விலகி உள்ளது.  அக்டோபர் முதல் வாரத்தில் மத்திய இந்திய பகுதி வரை தென்மேற்கு பருவ மழை சராசரியாக விலகி விடும். ஆனால் இந்த ஆண்டு தற்பொழுது புது டில்லி வரை கூட விலகவில்லை.  மேலும் வானிலை படிவங்களில் கணிப்பு படி அடுத்த சில தினங்களில் ஓர் காற்று அழுத்த தாழ்வு பகுதி வட இந்திய பகுதிகளை நோக்கி நகர கூடும்.  இதன் காரணமாக தென்மேற்கு பருவ மழை விலக மேலும் சற்று தாமதம் ஏற்பட வாய்ப்பு உள்ளது.

weather_update_t

இந்த ஆண்டு தற்போதைய கணிப்பு படி பத்து நாட்கள் வரை தாமதம் அடைந்து உள்ளது.  இதன் காரணமாக வடகிழக்கு பருவ மழை துவங்க தாமதம் அடைய வாய்ப்பு உள்ளது.

weather_update_

தமிழகத்தில் நேற்று பரவலாக வறண்ட வானிலை நிலவியது.  இந்த நிலை மேலும் சில தினங்களுக்கு தொடர கூடும் என வானிலை படிவங்கள் கணிக்கின்றன.  தெளிந்த வானம் காரணமாக வெப்ப நிலையும் சராசரி அளவை காட்டிலும் ஓரிரு டிகிரி அதிகமாகவும் நிலவி வருகிறது.  குறிப்பாக தென் தமிழக பகுதிகளில் பகல் நேர வெப்ப நிலை பல இடங்களில் 37 / 38 டிகிரி அளவிற்கு பதிவாகி வருகிறது.  வட தமிழக பகுதிகளில் வெப்ப நிலை 35 / 36 டிகிரி அளவிற்கு நிலவி வந்த போதிலும் பகல் பொழுதில் தெளிந்த வானம் காரணமாக வெப்பத்தின் தாக்கம் சற்று அதிகமாக தெரிந்து வருகிறது.