கடலோர தமிழகத்தில் மிதமான மழை பதிவு

நேற்று கடலோர தமிழகத்தில் சில பகுதிகளில் நல்ல மழை பதிவு ஆகியது.  விழுப்புரம், கடலூர், தஞ்சாவூர், நாகப்பட்டினம் ஆகிய மாவட்டங்களில் சில இடங்களில் பலத்த மழை பொழிந்தது. டெல்டா பகுதிகளில் பரவலாக மழை பெய்தது என்பது குறிப்பிடத்தக்கது.

weather_update

தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாடு பகுதியில் உள்ள தமிழ்நாடு வேளாண் பல்கலை கழகத்தின் தானியங்கி வானிலை மையம் நள்ளிரவு முதல் அதிகாலை 2:00 மணி வரை 75 மிமீ மழை பதிவு செய்தது.

இந்நிலையில் தமிழகத்தின் பல பகுதிகளில் பகல் நேர வெப்பத்தின் தாக்கம் மிக அதிகமாக உள்ளது.  தர்மபுரி, கரூர் ஆகிய இடங்கள் அக்டோபர் மாதத்தில் இதுவரை அதிகபட்ச வெப்ப நிலையை கடந்த இரு தினங்களில் பார்த்துள்ளது. இதே போல் திருச்சி மற்றும் பாளையம்கோட்டை பகுதிகளும் அதிகபட்ச வெப்ப நிலைக்கு சற்றே குறைவாக பதிவு செய்து உள்ளது.  நேற்று பாளையம்கோட்டையில் 39.2 டிகிரி அளவிற்கு பகல் நேர வெப்பநிலை பதிவானது.  அடுத்த சில தினங்களுக்கு பகல் நேர வெப்ப நிலை தமிழகத்தில் பரவலாக சராசரி அளவிற்கு அதிகமாகவே நிலவ கூடும்.