தமிழகத்தில் வெப்ப தாக்கம் மேலும் சில நாட்கள் நீடிக்க கூடும்

தமிழகத்தில் கடந்த ஓரிரு வாரங்களாக வெப்ப நிலை மிகவும் உயர்ந்து காணப்படுகிறது.  தெளிந்த வானிலை காரணமாக பகல் நேரத்தில் சராசரி அளவை காட்டிலும் அதிகமாகவே வெப்ப நிலை பதிவு ஆகி வருகிறது.  இரு தினங்களுக்கு முன் கரூர் மற்றும் தர்மபுரி ஆகிய இடங்களில் அக்டோபர் மாதத்தில் வரலாற்றில் அதிகபட்சமான பகல் நேர வானிலை பதிவு ஆகியது.  நேற்று பாளையம்கோட்டை (திருநெல்வேலி) இந்திய வானிலை மையம் 39.8 டிகிரி பதிவு செய்தது.  இதுவும் அக்டோபர் மாதத்தில் அதிகபட்ச வெப்ப நிலை ஆகும்.

temp

இன்றும் வானிலை படிவங்கள் தமிழகத்தில் வெப்ப நிலை சராசரி அளவை காட்டிலும் அதிகமாகவே நிலவ கூடும் என கணிக்கின்றன.  குறிப்பாக தென் தமிழகத்தில் திருநெல்வேலி மற்றும் அதனை ஒட்டி உள்ள பகுதிகளில் சில இடங்களில் 38 / 39 டிகிரி அளவை ஒட்டி இருக்க கூடும்.

பரவலாக வறண்ட வானிலையே காணப்படும் என்ற போதிலும் கடலோர தமிழகத்தில் சில பகுதிகளில் மாலை மற்றும் பின்னிரவு நேரங்களில் சில இடங்களில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளது.