தமிழகத்தில் வெப்ப சலன மழை குறைந்தது

நேற்று நமது வலை பதிவில் கூறியது போல தமிழகத்தில் வெப்ப சலன மழை குறைந்தது. நேற்று மாலை வட தமிழகத்தில் ஓரிரு இடங்களில் மாத்திரமே மழை பெய்தது.

சென்னையை பொருத்த வரை வட சென்னை பகுதிகளில் மாதவரம், ரெட் ஹில்ஸ் பகுதிகளில் நள்ளிரவில் சற்று மிதமான தூறல் பெய்தது.

இந்நிலை மேலும் ஓரிரு தினங்களுக்கு தொடர கூடும். பகல் நேர வெப்ப நிலை சற்று அதிகமாக இருக்க கூடும். மேல் அடுக்கில் மிக குறைவான ஈரபதம் நிலவி வரும் நிலையில் மழை வாய்ப்பு சற்று குறைந்தே காண படுகிறது.

மேற்கு கரையை ஒட்டி உள்ள பகுதிகளில் நாளை முதல் மழை வலு பெற கூடும் இது உட்புற பகுதிகளில் மேல் ஆடுக்கில் ஈரபதம் அதிகரிக்க வழி வகுத்து வெப்ப சலனம் காரணமாக மழை உருவாகும்.

Weather_map

சென்னையில் பகல் நேர வெப்பம் 38 டிகிரி வரை எட்ட கூடும். மழை வாய்ப்பு குறைந்தே இருந்தாலும் ஓரிரு இடங்களில் மாலை நேரங்களில் சாரல் மழை பெய்ய கூடும்.