உட்புற தமிழகத்தில் பரவலாக மழை, இன்றும் தொடர வாய்ப்பு

நேற்று தமிழகத்தின் மேற்கு உட்புற பகுதிகளில் பரவலாக மழை பெய்தது.  இதே போல் விழுப்புரம், கடலூர் மற்றும் நாகப்பட்டினம் போன்ற கடலோர மாவட்டங்களிலும் சில இடங்களில் பலத்த மழை பெய்து உள்ளது.  குறிப்பாக கள்ளகுறிச்சி, விருத்தாச்சலம் மற்றும் தர்மபுரி மாவட்டங்களின் சில பகுதிகளில் நல்ல மழை பதிவாகி உள்ளது.

weather_update

கொள்ளிடம், நாகப்பட்டினம்  போன்ற டெல்டா மாவட்ட பகுதிகளிலும் நல்ல மழை பதிவாகி உள்ளது விவசாயிகள் மனதில் மகிழ்ச்சியை ஏற்படுத்தும்.  மேலும் தமிழகத்தில் உள்ள காவேரியின் பிடிப்பு பகுதிகளில் இந்த மழை பெய்து உள்ளது மேட்டுரின் நீர் வரத்தையும் அதிகரிக்கும்.

weather_update_%e0%af%a7

தென்மேற்கு பருவ மழை காலம் முடியும் தருவாயில் உள்ள நிலையில் காற்றின் திசை மாற துவங்கி உள்ளது இதன் காரணமாக தென் இந்திய தீபகற்ப பகுதிகளில் வளிமண்டலத்தில் நிலையற்ற தன்மை நீடித்து வருகிறது.  மாலை / இரவு நேரங்களில் இதன் மூலம் இடி மேகம் உருவாகி மழை பெய்ய ஏதுவாகிறது.  காற்றின் திசை பொருத்து இந்த இடி மேகம் கடலோர பகுதிகளை நோக்கி இரவு முழுவதும் நகர்ந்து அதிகாலை நேரங்களில் கடலோர பகுதிகளில் மழை பெய்ய வாய்ப்பு உருவாக்கும்.

நேற்று போல் இன்றும் இந்த காற்று பிளவு கோடு நீடிப்பதால் மழை இன்றும் தொடர கூடும்.  குறிப்பாக தமிழகத்தின் மேற்கு உட்புற பகுதிகளான சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி மற்றும் அதனை ஒட்டி உள்ள கர்நாடகா உட்புற பகுதிகளில் சில இடங்களில் பலத்த மழை பெய்ய நல்ல வாய்ப்பு உள்ளது.  இந்த இடி மேகம் கிழக்கு தென் கிழக்காக நகர்ந்து கடலோர பகுதிகளில் அடையும் பொழுது டெல்டா பகுதிகளான திருச்சி, தஞ்சாவூர் போன்ற பகுதிகளில் சில இடங்களில் இரவு நேரத்தில் நல்ல மழை பெய்ய கூடும்.

வட கடலோர பகுதிகளான சென்னை காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களில் மழைக்கான வாய்ப்பு சற்று குறைவே.