
நேற்று தென் தமிழகம் மற்றும் மேற்கு உட்புற மாவட்டங்களில் பல இடங்களில் மழை பெய்தது. குறிப்பாக தேனி, மதுரை, விருதுநகர் மாவட்டங்களில் சில இடங்களில் பலத்த மழை பதிவாகியது. பல நாட்களாக வறண்ட வானிலை மற்றும் வெப்பத்தின் தாக்கம் மிக அதிகமாக நீடித்து வந்த நிலையில் இந்த மழை மக்களுக்கு மகிழ்வை தந்துள்ளது.
கடந்த சில நாட்களாக தமிழகத்தில் ஆங்காங்கே காற்று பிளவு கோடு காரணமாக பெய்து வந்த மழை இன்று முதல் படிப்படியாக குறைய கூடும். இன்று கேரளா, கர்நாடகா மற்றும் தமிழகத்தை ஒட்டி உள்ள மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளில் சில இடங்களில் மிதமான மற்றும் சற்றே பலத்த மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. இது காவேரியின் நீர் பிடிப்பு பகுதிகளில் பெய்ய நல்ல வாய்ப்பு உள்ளது. நேற்று வயநாடு பகுதிகளில் நல்ல மழை பெய்து உள்ள நிலையில் கபினி ஆற்றில் நீர்வரத்து அதிகரிக்க கூடும்.
வட தமிழகத்தில் பரவலாக வறண்ட வானிலையே நீடிக்கும். வடமேற்கு இந்திய பகுதியில் இருந்து உலர்ந்த தரை காற்று துவங்க உள்ள நிலையில் வடகிழக்கு பருவ மழை ஆரம்பிக்கும் வரை காற்றில் ஓர் வறண்ட நிலையே நீடிக்க கூடும்.