அக்டோபர் 1 முதல் தமிழக மாவட்ட வாரியான மழை அளவுகள்

நேற்று தென்மேற்கு பருவ மழை தென் இந்திய தீபகற்ப பகுதியில் சில இடங்களை விட்டு இந்தியாவின் அனேக இடங்களில் இருந்தும் விலகி விட்டது.  கடந்த சில தினங்களாக மிக வேகமாக விலகிய காரணத்தால் கிட்டத்தட்ட சராசரி அளவை ஒட்டியே இந்த ஆண்டு தென்மேற்கு பருவ மழையின் விலகல் முடிந்து உள்ளது.  கர்நாடகாவின் சில பகுதிகள் மற்றும் வடகிழக்கு இந்தியாவில் சில பகுதிகளில் மாத்திரமே பாக்கி உள்ளது.weather_update_4

 

இந்திய வானிலை துறையின் புள்ளிவிவர அடிப்படையில் அக்டோபர் 1 முதல் வடகிழக்கு பருவ மழை கணக்கில் வருகிறது. வடகிழக்கு பருவ மழை துவங்குவதற்கு காலம் உள்ள நிலையிலும் சராசரி அளவுகளை எதுவாக கணக்கிடுவதற்கும் புள்ளிவிவரங்களை சீராக கோப்பில் இடுவதற்கும் எதுவாக அக்டோபர் 1 முதல் வடகிழக்கு பருவ மழை காலம் என இந்திய வானிலை துறை கணக்கில் இடுகிறது.  தென்மேற்கு பருவமழை காலமும் இதே போல் ஜூன் 1 முதல் கணக்கில் எடுத்து கொள்ளபடுகிறது.

அக்டோபர் முதல் பகுதியில் வடகிழக்கு பருவ மழை துவங்க வாய்ப்பு குறைவே என போதிலும் உட்புற பகுதிகளில் பருவ காற்று மாறுவதன் காரணமாக மழை வாய்ப்பு உண்டு.  தமிழகத்தின் உட்புற பகுதிகளில் மாதத்தின் முற்பகுதியில் மழை வாய்ப்பு அதிகம். இந்த ஆண்டு அக்டோபர் மாதத்தின் முதல் பகுதியில் தமிழகத்தில் பரவலாக மழை குறைந்தே பெய்து உள்ளது.  விழுப்புரம் மற்றும் திருப்பூர் ஆகிய இரு மாவட்டங்கள் மாத்திரமே அக்டோபர் 16 வரை இயல்பு நிலையில் உள்ளது.  மற்ற அணைத்து மாவட்டங்களிலும் பற்றாக்குறை அளவிற்கு மழை பதிவு ஆகியுள்ளது.