வங்க கடலில் குறைந்த காற்று அழுத்த தாழ்வு பகுதி உருவாகிறது

தமிழகம் முழுவதுமே வடகிழக்கு பருவ மழையை நோக்கி எதிர்பார்த்து இருக்கும் நிலையில் வங்க கடல் பகுதியில் ஓர் குறைந்த காற்று அழுத்த தாழ்வு பகுதி உருவாகி வருகிறது.  தற்பொழுது உள்ள நிலையில் இதன் காரணமாக தென் இந்தியாவிற்கு அடுத்த சில நாட்களுக்கு எந்த பாதிப்பும் இருக்காது.

weather_update

வானிலை படிவங்களின் கணிப்பின் படி அந்தமான் தீவிற்கு அருகில் அடுத்த சில தினங்களுக்கு நிலை கொண்டிருக்கும்.  ஒரு சில வானிலை படிவங்கள் இது வட கிழக்காக நகர்ந்து பர்மா கரை பகுதியை அடைய கூடும் என கணிக்கின்றன.  எனினும் அடுத்த 24 – 48 மணி நேரங்களில் சற்று தெளிவு கிடைக்கும்.  மேலும் இந்த குறைந்த காற்று அழுத்த தாழ்வு பகுதி குறைந்த காற்று அழுத்த தாழ்வு மண்டலமாக மாற வாய்ப்பு உள்ளது.

இன்று நிலவக்கூடிய காற்று பிளவு கோடு காரணமாக தென் தமிழகம் மற்றும் கேரளாவின் சில பகுதிகளில் சில இடங்களில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளது.  இது பரவலாக பெய்ய வாய்ப்பு மிகவும் குறைவே.  தமிழகத்தின் ஏனைய பகுதிகளில் பரவலாக வறண்ட வானிலையே காணப்படும்.