வங்ககடலில் குறைந்த காற்று அழுத்த தாழ்வு மண்டலம், புயலாக மாற வாய்ப்பு

வங்ககடலில் கடந்த இரு தினங்களுக்கு முன் உருவான குறைந்த காற்று அழுத்த தாழ்வு பகுதி வலுவடைந்து குறைந்த காற்று அழுத்த தாழ்வு மண்டலமாக மாறி உள்ளது.  இது அடுத்த ஓரிரு தினங்களில் மேலும் வலுப்பெற்று புயலாக மாற கூடும்.  இந்த புயல் பர்மா கரை பகுதியை நோக்கி நகரக்கூடும் என வானிலை படிவங்கள் கணிக்கின்றன.

weather_update_1

பர்மா கரையை ஒட்டி நகர்ந்த பிறகு மீண்டும் இந்திய கடல் பகுதியை நோக்கி வலு குறைந்து நகர கூடும் என வானிலை படிவங்கள் கணிக்கின்றன இதன் காரணமாக கீழை காற்று உருவாக தாமதம் அடைய கூடும்.  இந்த புயல் சின்னம் தமிழகத்திற்கு வடகிழக்கே உள்ளதால் முற்றிலும் வலுவிழந்த பிறகே காற்றின் திசை மாற ஏதுவான சூழல் உருவாகும்.  கீழை காற்று உருவாகாமல் வடகிழக்கு பருவமழை துவங்க வாய்ப்பு எதுவாக இராது.

weather_update

நேற்று தென் தமிழகத்தின் பல பகுதிகளில் மிதமான மழை பதிவாகியுள்ளது.  குறிப்பாக தேனி, மதுரை மற்றும் திண்டுக்கல் மாவட்ட பகுதிகளில் சில இடங்களில் பலத்த மழை பெய்தது.  இன்றும் தென் தமிழகத்தின் பல பகுதிகளில் மழை வாய்ப்பு உள்ளது.  இதே போல் டெல்டா மாவட்ட பகுதிகளில் நல்ல மழை பெய்ய கூடும்.