வங்க கடலில் கியான்ட் புயல், தென் இந்திய கரையை நோக்கி நகர்கிறது

வங்க கடலில் கடந்த 4 / 5 நாட்களாக நிலை கொண்டுள்ள சலனம் தற்பொழுது கியான்ட் புயலாக வலுப்பெற்று உள்ளது.  இன்றைய காலை நிலவரப்படி காக்கிநாடாவிற்கு கிழக்கே தென்கிழக்கே 800 கிமீ அளவில் நிலை கொண்டுள்ளது.  இது அடுத்த 12 – 24 மணி நேரத்திற்கு மேற்கு திசையில் நகர்ந்து பின் மேற்கு தென்மேற்கு திசையில் நகர கூடும் என வானிலை படிவங்கள் கணிக்கின்றன.

weather_update_1

அடுத்த 24 மணி நேரங்களுக்கு புயல் வலுவில் இருக்கும் கியான்ட் அதற்கு பிறகு படிப்படியாக வலு குறைய கூடும்.  வலு குறைந்து தென் மேற்காக நகர்ந்து தெற்கு ஆந்திரா கரை பகுதியில் 28 / 29 அக்டோபர் அன்று நன்கு அமைந்த காற்று அழுத்த தாழ்வு பகுதியாக கரையை கடக்க வாய்ப்பு உள்ளது.

இதன் காரணமாக வட தமிழகம் மற்றும் தென் ஆந்திர கரையோர பகுதியில் இந்த வார இறுதியில் மழை வாய்ப்பு உள்ளது.  கரையை கடக்கும் பகுதிக்கு வடக்கே உள்ள இடங்களில் அதிக மழை வாய்ப்பு உள்ளதாக வானிலை படிவங்கள் கணிக்கின்றன.