வட தமிழகத்தில் இன்று மாலை மழை வாய்ப்பு

நேற்று வட தமிழகத்தில் அநேக இடங்களில்  மிதமான வெப்ப நிலை இருந்தது. சென்னையில் பகல் நேர வெப்பம் 35.4 டிகிரி அளவே தொட்டது.

கடந்த இரு தினங்களாக நின்று இருந்த மழை மீண்டும் இன்று வட தமிழகத்தில் தொடங்க கூடும்.

Weather_map
மத்திய ஆசிய பகுதிகளிலிருந்து வரும் உலர்ந்த காற்றும் அரபிக்கடல் பகுதிகளிலிருந்து வரும் ஈர பத காற்றும் தென் இந்திய உட்புற பகுதிகளில் இணைவதால் மேல் அடுக்கில் காற்று நிலையற்ற தன்மை உருவாக வாய்ப்பு உள்ளது. இதன் காரணமாக தென் இந்தியாவின் பல பகுதிகளில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. வட தமிழகம் மற்றும் அதனை ஒட்டிய உள்ள தென் ஆந்திரா பகுதியில் மாலை அளவில் இடி மின்னலுடன் மழை பெய்ய கூடும். இந்த மழை வட மேற்கிலிருந்து தென் கிழக்காக சென்னையை நோக்கி இரவு பொழுதில் மழை கொடுக்க கூடும்.