வடகிழக்கு பருவ மழை துவங்க ஏதுவான வானிலை

தமிழகம் இன்று தீபாவளி பண்டிகை கொண்டாடி வரும் வேளையில் விவசாய மக்களுக்கு மிகவும் மகிழ்வை அளிக்க கூடிய வேறொரு முக்கிய நிகழ்வும் உருவாகி வருகிறது.  கியான்ட் புயல் வலு குறைந்து சென்னைக்கு வடகிழக்கே குறைந்த காற்று அழுத்த தாழ்வு பகுதியாக நிலை கொண்டுள்ளது.  இதன் காரணமாக இன்று முதல் கடலோர தமிழகத்தின் பல பகுதிகளில் மாலைக்கு மேல் மழை வாய்ப்பு உள்ளது.  weather_update_1

இந்த குறைந்த காற்று அழுத்த தாழ்வு பகுதி காரணமாக காற்றின் திசையும் வெகு விரைவில் மாறி விடும்.  அடுத்த 24 – 36 மணி நேரங்களில் கீழை காற்று துவங்கி விடும்.  இது வடகிழக்கு பருவ மழை காலம் துவங்க ஏதுவாகும்.

மேலும் இன்று முதல் அடுத்த ஓரிரு தினங்களுக்கு தற்பொழுது உள்ள குறைந்த காற்று அழுத்த தாழ்வு பகுதி காரணமாக மழை பெய்ய கூடும்.  குறிப்பாக டெல்டா மாவட்ட பகுதிகளில் பரவலாக மழையும் சில இடங்களில் மிதமான முதல் கன மழை பெய்ய வாய்ப்பு உள்ளது.

சென்னையில் இன்று மதியத்திற்கு மேல் மழை பெய்ய வாய்ப்பு உள்ளது, சில சமயம் சற்றே மிதமான மழை பெய்ய கூடும்.