வங்ககடலில் குறைந்த காற்று அழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்பு

வடகிழக்கு பருவ மழை கடந்த ஞாயிறு அன்று தமிழகத்தில் தொடங்கியது.  கடந்த இரு தினங்களாக தென் தமிழகம், மேற்கு உட்புற மாவட்டங்கள் மற்றும் டெல்டா மாவட்ட பகுதிகளில் பரவலாக நல்ல மழை பெய்து உள்ளது.  நேற்றும் திண்டுக்கல், நாகப்பட்டினம் மற்றும் கன்னியாகுமரி மாவட்ட பகுதிகளில் சில இடங்களில் நல்ல மழை பதிவானது.

weather_update_1

இந்நிலையில் வங்ககடல் பகுதியில் இன்று புதியதொரு குறைந்த காற்று அழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்பு உள்ளது.  அந்தமான் தீவிற்கு தென் கிழக்கே இது உருவாக கூடும்.  அடுத்த இரு தினங்களுக்கு மேற்கு வடமேற்கு திசையில் நகரக்கூடும் என வானிலை படிவங்கள் கணிக்கின்றன. நவம்பர் 3 / 4 அன்று புயலாக மாற வாய்ப்பு உள்ளது.  இதற்கு பின் இதன் திசை வடமேற்காக மாற கூடும்.  தற்பொழுது உள்ள வானிலை படிவங்களின் கூற்று படி இந்த குறைந்த காற்று அழுத்த தாழ்வு பகுதி காரணமாக தமிழகத்திற்கு எந்த பெரிய சாதகமும் இல்லை என கணிக்கின்றன

weather_update_2

இன்றும் தமிழகத்தில் ஆங்காங்கே மழை பெய்ய வாய்ப்பு உள்ளது.  வட தமிழகத்தில் மழைக்கான வாய்ப்பு சற்று குறைவே.  தென் தமிழகத்தில் கன்னியாகுமரி மாவட்டம் மற்றும் அதனை சார்ந்த கேரளா பகுதிகளில் ஓரிரு இடங்களில் பலத்த மழை பெய்ய கூடும்.