வங்ககடல் குறைந்த காற்று அழுத்த தாழ்வு பகுதி எங்கு செல்ல கூடும்

வடகிழக்கு பருவமழை நேற்று கடலோர பகுதிகளில் நீடித்து வருகிறது.  நேற்று காலையும் இன்றும் கடலோர மாவட்டங்களில் பல பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருகிறது.  இன்று காலை 5:30 மணி வரை நாகை மற்றும் காரைக்கால் பகுதிகளில் 10 செமீ அளவிருக்கும் அதிகமாக மழை பெய்து உள்ளது.  இதே போல் தூத்துக்குடி, கடலூர், தஞ்சாவூர், சென்னை ஆகிய பகுதிகளில் பல இடங்களில் மழை பதிவாகியுள்ளது.

weather_update_1

இந்நிலையில் வங்ககடல் பகுதியில் நிலை கொண்டுள்ள நன்கமைந்த குறைந்த காற்று அழுத்த தாழ்வு பகுதி தற்பொழுது சென்னைக்கு கிழக்கே 800 கிமீ தொலைவில் அமைந்துள்ளது.  கடந்த 12 மணி நேரத்தில் சற்று மெதுவாக நகர்ந்து செல்வது திசை மாறக்கொடிய வாய்ப்பு உள்ளதை காட்டுகிறது.

weather_update_2

இந்திய வானிலை துறை இன்று இந்த கலக்கம் குறைந்த காற்று அழுத்த தாழ்வு மண்டலமாக மாற வாய்ப்பு உள்ளது என கூறியுள்ளது.  அடுத்த 24 மணி நேரத்தின் பாதை தமிழகத்தில் பருவ மழை மேலும் சில தினங்களுக்கு நீடிக்க வாய்ப்பு ஏற்படுத்தக்கூடும்.

weather_update_3

புயல் சின்னங்கள் வளிமண்டலத்தில் உள்ள உயரழுத்த முகட்டின் (High Pressure) வழி நடத்தலில் பாதை வகுப்பது வழக்கம்.  தற்பொழுதைய வானிலை படிவங்களின் கணிப்பின் படி தென் சீன கடற்பகுதியில் உள்ள உயரழுத்த முகடு வங்க கடலில் உள்ள காற்று அழுத்த தாழ்வு பகுதியை வழி நடத்த கூடும்.  இதன் காரணாமாக இந்த முகட்டின் வெளிப்புற விளிம்பை ஒட்டி குறைந்த காற்று அழுத்த தாழ்வு பகுதி நகரக்கூடும். இதனால் வடமேற்காக நகர்ந்து கடலோர ஆந்திர கரை பகுதியை நோக்கி முதலில்ந நகர்ந்து பின் மேலும் வடக்காக நகர வாய்ப்பு உள்ளது.

இதுவே பாதை ஆகுமெனில் தமிழகத்தில் மழையின் அளவு இன்று முதல் படிப்படியாக குறைய கூடும்.  மேற்கு திசையில் நகரும் எனில் தமிழகத்தில் கடலோர பகுதிகளில் மழை அதிகரிக்க வாய்ப்பு உள்ளது.