தமிழகத்தில் பரவலாக வறண்ட வானிலை, தென் கடலோர பகுதியில் மழை வாய்ப்பு

தற்பொழுது வடகிழக்கு பருவ மழை காலம் என்ற போதிலும் தமிழகத்தில் கடந்த இரு தினங்களாக பரவலாக வறண்ட வானிலையே நிலவி வருகிறது.  தென் தமிழகத்தில் சில பகுதிகளில் மாத்திரமே மழை பதிவாகி வருகிறது. வட தமிழகத்தை பொறுத்த வரை பகல் நேர வெப்ப நிலை 4 / 5 டிகிரி வரை அதிகரித்து காணப்படுகிறது.

weather_update_2

வடக்கு வங்ககடல் பகுதியில் நிலவி வரும் குறைந்த காற்று அழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக காற்றின் திசை தற்பொழுது சாதகமற்ற நிலையில் உள்ளது.  தென் இந்திய தீபகற்ப பகுதியில் கீழை காற்று வீசுவதற்கு பதிலாக வடமேற்கில் இருந்து உலர்ந்த நிலக்காற்று வீசி வருகிறது.  மேலும் பகல் நேரத்தில் தெளிந்த வானம் காரணமாக பகல் நேர வெப்ப நிலையம் சராசரி அளவை காட்டிலும் அதிகரித்து காணப்படுகிறது.

வங்ககடலில் நீடித்து வரும் குறைந்த காற்று அழுத்த தாழ்வு மண்டலம் அடுத்த ஓரிரு நாட்களில் வலுவிழந்து விடும்.  இதற்கு மேலே காற்றின் திசை மீண்டும் கிழக்கில் இருந்து மாறக்கூடும்.  அதுவரை தமிழகத்திற்கு பரவலான மழை வாய்ப்பு சற்று குறைவே.

weather_update_1

தென் தமிழக கடலோர பகுதிகளில் ஓரிரு இடங்களில் மழை பெய்து வருகிறது.  இன்றும் தூத்துக்குடி முதல் டெல்டா பகுதி வரையிலான கடலோர பகுதியில் சில இடங்களில் மழை பெய்யக்கூடும் ஏனைய தமிழக பகுதிகளில் பரவலாக வறண்ட வானிலையே நீடிக்கும்.