தென் தமிழகத்தில் மழை வாய்ப்பு

நேற்று சென்னையில் சில பகுதிகளில் மழை பெய்தது.  வெப்ப சலனம் காரணமாக சில தினங்களுக்கு பின் பெய்த மழை மக்களுக்கு மிகுந்த மகிழ்ச்சியை கொடுத்தது.  தென் சென்னை பகுதியில் ஓரிரு இடங்களில் மிதமான மழை பதிவாகியது.  அண்ணா பல்கலைகழகம் மற்றும் தரமணி பகுதியில் முறையே 17 மற்றும் 15 மிமீ அளவிற்கு மழை பதிவானது.

வங்ககடல் பகுதியில் நிலவி வந்த சலனம் முற்றிலும் முடிவடைந்தது. இதனால் மாறி இருந்த காற்றின் திசை மீண்டும் அடுத்த ஓரிரு நாட்களில் கீழை காற்றாக மாறிவிடும்.  கீழை காற்று காரணமாக கடலோர பகுதிகளில் மழை வாய்ப்பும் அதிகரிக்க கூடும்.

weather_update_1

தற்பொழுது உள்ள நிலையில் இன்று தென் தமிழகத்தின் சில பகுதிகளில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளது.  ஓரிரு இடங்களில் சற்றே மிதமான மழை பெய்ய கூடும்.  தென் தமிழகத்தை ஒட்டிய கேரளா பகுதிகளில் சில இடங்களில் மழை பெய்ய கூடும் என வானிலை படிவங்கள் கணிக்கின்றன.  வடதமிழகத்தில் பரவலாக உலர்ந்த வானிலை அடுத்த ஓரிரு நாட்கள் நீடிக்க கூடும்.