தமிழகத்தில் அடுத்த ஓரிரு நாட்களில் மீண்டும் மழை துவங்க வாய்ப்பு

தமிழகத்தில் கடந்த சில தினங்களாக வறண்ட வானிலை காணப்படுகிறது.  குறிப்பாக வடதமிழகத்தில் தக்கான பீடபூமியில் இருந்து வரும் உலர்ந்த காற்று காரணமாக இரவு நேர வெப்பநிலை வழக்கத்தை விட சில டிகிரி குறைந்து காணப்படுகிறது. சென்னைக்கு மேற்கே /  வடமேற்கே உள்ள வேலூர், திருத்தணி, திருப்பதி போன்ற இடங்களில் நேற்று இரவு நேர வெப்ப நிலை இருபது டிகிரிக்கும் கீழே  பதிவானது.  இதே போல் சென்னை மற்றும் அதன் சுற்றுப்புற பகுதிகளிலும் நேற்று மற்றும் முந்திய தினம் பிப்ரவரிக்கு பிறகு குறைந்த இரவு நேர வெப்ப நிலை பதிவானது.

wind

காற்றின் திசை வடமேற்கில் இருந்து வருவதால் இந்த நிலை நீடிக்கிறது.  இதன் காரணமாகவே மழையும் குறைந்து வடகிழக்கு பருவ மழையில் ஓர் தொய்வு ஏற்பட்டு உள்ளது.  தென் இந்திய தீபகற்ப பகுதியில் காற்றின் அழுத்தம் சற்று அதிகமாக உள்ளதாலும் உலர்ந்த வானிலை காணப்படுகிறது.

இந்த வார இறுதியில் காற்றின் திசை மீண்டும் கீழை காற்றாக மாறக்கூடும் என வானிலை படிவங்கள் கணிக்கின்றன.  கீழை காற்று வருவதன் காரணமாக மழைக்கான வாய்ப்பும் அதிகரிக்கும். குறிப்பாக கடலோர பகுதிகளில் மழை மீண்டும் பெய்ய கூடும்.

wind2

சில வானிலை படிவங்கள் இந்த வார இறுதியில் கிழக்கத்திய கலக்கம் தென் இந்திய பகுதியை நோக்கி வரக்கூடும் என எதிர்பார்கின்றன.  இது வரும் எனில் பரவலான மழைக்கான வாய்ப்பு அதிகரிக்க கூடும்.

wind1