வடகிழக்கு பருவ மழை நவம்பர் 11 வரை மழை அளவு

உங்களுக்கு தெரியுமா தமிழகத்தில் திருப்பூர் மாவட்டத்தில் மாத்திரமே இந்த ஆண்டு வடகிழக்கு பருவமழை காலம் துவங்கிய பின் சராசரி அளவு மழை பதிவாகியுள்ளது.  ஏனைய அணைத்து மாவட்டங்களும் பட்ட்ராக்குறை அளவே மழை பதிவாகியுள்ளது.  இதில் ஓர் முக்கிய குறிப்பு என்னவென்றால் திருப்பூர் மாவட்டமும் சராசரி அளவை காட்டிலும் 15 விழுக்காடு அளவிற்கு மழை குறைந்தே பதிவாகியுள்ளது.

குறிப்பாக வட தமிழகத்தில் காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களில் சராசரி அளவிற்கு 10 விழுக்காடு அளவே மழை நவம்பர் 11 வரை பதிவாகியுள்ளது. திருப்பூர், மதுரை மற்றும் திண்டுக்கல் ஆகிய மாவட்டங்களை தவிர அணைத்து மாவட்டங்களும் சராசரி அளவிற்கு பாதி அல்லது அதற்கும் கீழே மழை பெற்று உள்ளது.

தற்பொழுது கீழை காற்று மீண்டும் உருவாகி உள்ள நிலையில் வடகிழக்கு பருவ மழை மீண்டு வரவேண்டும் என்பதே தமிழக மக்களின் வேண்டுதல் ஆகும்.