தமிழகத்தின் சில இடங்களில் மழை வாய்ப்பு, பரவலாக வறண்ட வானிலை

வடகிழக்கு பருவ மழை துவங்கி இரு வாரங்களான நிலையில் தமிழகத்தில் பரவலாக வறண்ட வானிலையே நீடித்து வருகிறது.  குறிப்பாக வடதமிழகத்தில் அக்டோபர் மாதம் இறுதிக்கு பிறகு பரவலான மழை பெய்ய வில்லை.  தென் தமிழகத்தில் கடலோர பகுதிகளில் சில இடங்களில் மழை பெய்து வரும் போதிலும் மக்களின் எதிர்பார்பிற்கு ஏற்றவாறு மழை அளவு இல்லை.

இந்நிலையில் பூமத்திய ரேகை அருகில் தெற்கு வங்ககடல் பகுதியில் நிலவி வரும் காற்று அழுத்த தாழ்வு நிலை அடுத்த ஓரிரு தினங்களில் குறைந்த காற்று அழுத்த தாழ்வு பகுதியாக மாற வாய்ப்பு உள்ளது.

weather_update_2

இதன் காரணமாக இலங்கை மற்றும் தென் தமிழகத்தில் மழை வாய்ப்பு அதிகரிக்க கூடும்.  இலங்கை அருகே இந்த சலனம் வரும் பொழுது வானிலை படிவங்கள் இடையே அடுத்து நிலவக்கூடிய நிகழ்வுகளில் ஒருமித்த கருத்து இல்லை.  வானிலை படிவங்கள் வெவ்வேறாக இந்த சலனத்தின் வலிமையை கருத்தில் கொள்வதால் பாதையும் வெவ்வேறாக கணிக்க படுகிறது. பொறுமை காப்பதே தற்பொழுது உள்ள நிலையில் உசிதம்.

weather_update_1

இன்றும் தென் தமிழகம் மற்றும் கேரளாவின் சில பகுதிகளில் மழை பெய்யக்கூடும். ஓரிரு இடங்களில் பலத்த மழைக்கான வாய்ப்புக்கள் உள்ளது.  அரபிக்கடல் பகுதியில் நிலவிவரும் காற்று அழுத்த தாழ்வு நிலை காரணமாக நீலகிரி மலைப்பகுதியில் ஓரிரு இடங்களில் நல்ல மழை தொடரக்கூடும்.