வட தமிழகத்தில் நள்ளிரவில் பலத்த மழை

நேற்று நமது வலை பதிவில் கூறியது போல வட தமிழகத்தில் சென்னையை ஓட்டி உள்ள பகுதிகளில் நள்ளிரவில் பலத்த மழை பெய்தது. குறிப்பாக தென் சென்னை பகுதிகளில் மிக பலத்த மழை பெய்தது.

நேற்று போல் இன்றும் வட தமிழகத்தில் சில இடங்களில் பலத்த மழை பெய்ய வாய்ப்பு மிக அதிகமாக உள்ளது.  காற்றின் மேல் அடுக்கில் நிலையற்ற தன்மை இன்றும் நிலவுகிறது. ஆனால் இன்று இந்த நிலையற்ற தன்மை சற்றே தெற்கு நோக்கி நகர்ந்து உள்ளது, ஆகையால் பலத்த மழை திருவண்ணாமலை, கடலூர் புதுச்சேரி போன்ற பகுதிகளில் அதிகமாக இருக்க கூடும்.

Weather_map

தென் இந்தியாவின் மேற்கு கடற்கரை பகுதிகளில் தென் மேற்கு பருவ மழை மேலும் வலு பெறும் நிலை உருவாகி உள்ளது. இதன் காரணமாக கர்நாடக மற்றும் கேரள பகுதிகளில் மழை அதிகரிக்க கூடும்.