வங்கக்கடலில் குறைந்த காற்று அழுத்த தாழ்வு பகுதி

நமது வானிலை வலைபதிவில் நேற்று பதிவு செய்தது போல் வங்கக்கடலில் அந்தமான் தீவு அருகே குறைந்த காற்று அழுத்த தாழ்வு பகுதி உருவாகி உள்ளது.  அடுத்த 48 மணி நேரத்தில் இலங்கைக்கு கிழக்கே வரும் பொழுது இந்த குறைந்த காற்று அழுத்த தாழ்வு பகுதி மேலும் வலுப்பெற்று குறைந்த காற்று அழுத்த தாழ்வு மண்டலமாக மாறி தமிழக கடலோர பகுதியை நோக்கி நகரக்கூடும்.  weather_update_1

தற்பொழது உள்ள நிலையில் வானிலை படிவங்களின் கூற்று படி டிசம்பர் 1 அல்லது 2 அன்று நாகப்பட்டினம் மற்றும் மகாபலிபுரத்திற்கு இடைப்பட்ட கடற்கரை பகுதியில் கரையை கடக்க வாய்ப்பு உள்ளது.

இதன் காரணமாக கடந்த இரு வாரங்களாக தொய்வில் இருந்த வடகிழக்கு பருவமழை மீண்டும் வீரியம் பெற்று கடலோர பகுதியில் பரவலாக மழை பெய்ய கூடும்.  குறிப்பாக டெல்டா, கடலூர், புதுவை விழுப்புரம் மற்றும் காஞ்சிபுரம் ஆகிய மாவட்டத்தில் சில இடங்களில் பலத்த மழை பெய்ய கூடும்.  நவம்பர் 30ஆம் தேதி முதல் துவங்க கூடிய மழை டிசம்பர் 2 அல்லது 3 ஆம் நாள் வரை மழை நீடிக்க கூடும் என வானிலை படிவங்கள் கணிக்கின்றன.