வங்கக்கடலில் அழ்ந்த காற்று அழுத்த தாழ்வு மண்டலம் புயலாக மாற வாய்ப்பு

வங்கக்கடலில் இலங்கைக்கு கிழக்கே 500 கிமீ  தொலைவில் நிலை கொண்டிருந்த குறைந்த காற்று அழுத்த தாழ்வு மண்டலம் தற்பொழுது மேலும் வலுப்பெற்று அழ்ந்த காற்று அழுத்த தாழ்வு மண்டலமாக மாறி உள்ளது.  இது மேலும் அடுத்த 12 – 18 மணி நேரங்களில் புயலாக வலுப்பெற்று தமிழக கரையோரமாக நகரக்கூடும்.

weather_update_

வானிலை படிவங்களில் கூற்றுப்படி இந்த சலனம் புயலாக மாறக்கூடும் என்ற போதிலும் கரையை கடப்பதற்கு முன் சற்றே வலு இழக்க கூடும் என கணிக்கின்றன.  இதன் காரணமாக வேதாரண்யம் மற்றும் மகாபலிபுரம் ஆகிய இடைப்பட்ட பகுதியில் கரை கடக்கும் பொழுது காற்று அழுத்த தாழ்வு மண்டலமாக இருக்க கூடும்.

கடலோர தமிழகத்தை பொறுத்த வரை நாளை காலை முதல் மழை துவங்க வாய்ப்பு உள்ளது.  சலனம் கரையை கடக்கும் பொழுது பலத்த காற்று மற்றும் மழைக்கான வாய்ப்பு டெல்டா மாவட்டங்கள், கடலூர் மற்றும் புதுவை பகுதிகளில் நிலவக்கூடும்.

விரிவான மழை நிலவ பதிவு இன்று மாலை மீண்டும் பதிவு செய்யப்படும்.