வலுவிழந்த நிலையில் நாடா புயல் கரையை கடந்தது

கடந்த இரு தினங்களாக தமிழகத்தின் அனைவரின் கவனத்தையும் ஈர்ந்து இருந்த நாடா புயல் இன்று காலை வலுவிழந்த நிலையில் குறைந்த காற்று அழுத்த தாழ்வு மண்டலமாக கரையை கடந்தது.  நேற்று பல இடங்களில் பரவலாக மிதமான மழை பதிவான நிலையில் இன்று இந்த சலனம் தென்னிந்திய தீபகற்ப பகுதியை கடந்து செல்லும் பொழுது உட்புற மாவட்டங்களில் மழை வாய்ப்பு உருவாகி உள்ளது.

weather_update_1

நேற்று சென்னை, காஞ்சிபுரம், மதுரை, திண்டுக்கல் ஆகிய பகுதிகளில் பரவலான மழை பதிவு ஆனது.  அதிக பற்றாக்குறையை சந்தித்து வரும் தமிழகத்திற்கு இந்த சலனம் காரணமாக வந்த மழை எதிர்பார்த்த அளவை விட குறைவே என்ற போதிலும் பல தினங்களாக வறண்ட வானிலை நிலவி வந்தது மாறி மழை பெய்தது விவசாயிகளுக்கு சற்றே மன நிம்மதியை அளித்துள்ளது.

மேற்கு உட்புற மாவட்டத்தில் மழை இந்த ஆண்டு குறைந்தே பெய்து உள்ள நிலையில் இன்று பரவலாக மழை பெய்ய வாய்ப்பு உள்ளது.  நீலகிரி மலை பகுதிகளில் ஒரு சில இடங்களில் பலத்த மழை வாய்ப்பு உள்ளது.  கோயம்புத்தூர், சேலம், நாமக்கல், ஈரோடு, கரூர் போன்ற பகுதிகளில் மிதமான மழை பெய்ய கூடும் என வானிலை படிவங்கள் கணிக்கின்றன.

வட தமிழகத்தின் கடலோர பகுதிகளில் ஒரு சில இடங்களில் மழை பெய்யக்கூடும். நேற்று போல் பரவலாக மழை பெய்ய சற்று வாய்ப்பு குறைவே என கூறலாம்.