இன்று டெல்டா மாவட்டங்களில் மழை வாய்ப்பு

நேற்று இரவு வட தமிழகத்தில் கடலூர், விழுப்புரம் மாவட்டங்களில் பல இடங்களில் நல்ல மழை பெய்தது. சென்னையில் தாம்பரம், கேளம்பாக்கம் பகுதிகளில் சற்று மிதமான மழை பெய்தது.

இன்று தமிழகத்தில் வானம் மேக மூட்டமாக நிலவும், பகல் நேர பொழுதில் சற்று மிதமான தட்ப வெப்ப நிலை நீடிக்கும். கடந்த இரு தினங்களாக மேல் அடுக்கில் நிலவி வரும் காற்று நிலையற்ற தன்மை காரணமாக வட தமிழக பகுதிகளில் பெய்த மழை இன்று டெல்டா மற்றும் தென் தமிழக மாவட்டங்களில் மாலை பொழுதில் பெய்யும். மேலும் மேற்கு மத்திய தமிழக பகுதிகளிலும் மழை பெய்ய நல்ல வாய்ப்பு உள்ளது.

Weather_map

சென்னையை பொருத்த வரை பகல் பொழுது மேக மூட்டமாகவும் அவ்வப்பொழுது சாரல் மழையும் பெய்ய கூடும்.