பண்டைய வாணிகத்தில் பருவக்காற்று பங்கு

தஞ்சையில் இருந்த சோழ சாம்ராஜியம் எவ்வாறு தென்கிழக்கு ஆசிய நாடுகள் வரை பறந்து விரிந்தது என எண்ணியது உண்டா?

பல நூறு ஆண்டுகளுக்கு முன் எவ்வாறு ரோமர்கள் / சீனர்கள் / சேர சோழ பல்லவர்கள் தங்களது கால் தடங்களை பல ஆயிரம் கிலோமீட்டர்கள் தள்ளி பதித்தது எப்படி என்று யோசித்து உண்டா.

இன்று விமான பயணம் காரணமாக ஓரிரு நாட்களில் அடைய கூடிய நிலை உள்ளது ஆனால் அந்த காலங்களில் கடல் வழியாக எவ்வாறு இவர்கள் தரணி முழுவதும் சுற்றினார்கள் என என்னும் பொழுது மிகுந்த வியப்பு அளிக்கிறது அல்லவா. இந்த இரண்டு கேள்விகளுக்கு இடையே ஓர் ஒற்றுமை உள்ளது.  அந்த ஒற்றுமைக்கு காரணம் வானிலை என என்னும்போது நமது  முன்னோர்களின் அறிவியல் வளர்ச்சி எந்த அளவிற்கு உயர்ந்து இருந்தது என தெரிந்து கொள்ளலாம்.

வடகிழக்கு பருவ மழை காலங்களில் கீழை காற்றும் தென்மேற்கு பருவ மழை காலங்களில் மேலை காற்றும் வீசும் என நாம் அறிந்ததே.  இந்த பருவக்காற்றே பண்டைய வாணிபம் மற்றும் சாம்ராஜ்ஜியங்கள் வளர உதவிய ஓர் முக்கிய காரணி.  இதன் காரணமாகவே கடலோர பகுதியில் இருந்த சாம்ராஜ்ஜியங்கள் வளர்ந்தன.  கிட்டத்தட்ட 2000 ஆண்டுகளுக்கு முன் ஹிப்பலஸ் என்கிற கிரேக்க மாலுமி பருவக்காற்றின் உதவியுடன் கடல் வழியாக பல இடங்கள் போக முடியும் என அறித்தார்.

தென்மேற்கு பருவ மழை காலங்களில் மேற்கில் இருந்து வீசும் காற்றின் உதவியுடன்  அரேபியர்கள், ரோமானியர்கள், என பலரும் அரபிக்கடல் கடந்து இந்தியாவில் உள்ள அரசுகளுடன் வாணிபம் செய்ய துவங்கினர். இந்தியாவில் இருந்து பொருட்கள் பெற்று கொண்டு சில மாதங்களுக்கு பிறகு வரும் வடகிழக்கு பருவக்காற்றின் உதவியுடன் மீண்டும் அரேபியாவை அடைந்து விடுவர். இதே போல் இந்திய வாணிகர்களும் தென்கிழக்கு ஆசியா மற்றும் சீனா சென்று தங்களது வாணிபத்தை தொடர்ந்தனர்.

சோழர்கள் பருவக்காற்றின் தன்மை அறிந்தே மிகப்பெரிய கடற்படையை உருவாக்கினர்.  இதன் மூலம் தஞ்சையில் இருந்து மேற்கில் இருந்து வீசும் பருவக்காற்றின் உதவியுடன் ஸ்ரீ விஜயம் போன்ற தென் கிழக்கு நாடுகளை தங்களது ஆளுமைக்குள் கொண்டு வந்தனர்.