சென்னையில் கோடை மழை வாய்ப்பு

வார்தா புயல் சென்னையை கடந்த பொழுது பெய்த மழைக்கு பின் சென்னை கிட்டத்தட்ட 6 மாதங்களாக வறண்ட வானிலையே சந்தித்து வந்தது. உட்புற மாவட்டங்களில் மழை பெய்த போதிலும் சென்னையை பொறுத்த வரை மழை ஏமாற்றேமே நிலவியது. கடந்த மே மாதம் 30ஆம் தேதி சென்னைக்கு வடமேற்கு திசையில் உருவான இடி மேகங்கள் சில பகுதிகளில் மழை பெய்தது. நேற்று மாலை மற்றும் இரவு நேரங்களில் அதே போல் சில இடங்களில் மழை பெய்தது. பரவலான மழை எப்போது பெய்யும் என்ற ஏக்கம் சென்னை மக்கள் மத்தியில் நிலவி வரும் வேளையில் அடுத்த சில தினங்கள் சென்னைக்கு மழை பெய்ய கூடிய ஏற்ற வானிலை ஏற்பட்டு வருகிறது.


அரபிக்கடல் பகுதியில் ஏற்பட்டுள்ள மேலடுக்கு காற்று சுழற்சியும் வங்ககடல் பகுதியில் உருவாகி வரும் சலனம் காரணமாக தென் இந்திய தீபகற்ப பகுதிகளில் வளிமண்டல நிலையற்ற தன்மை ஏற்படக்கூடிய சூழ்நிலை இந்த வாரத்தின் ஏனைய நாட்களில் இருக்கிறது. இந்த நிலையற்ற தன்மை காரணமாக பகல் நேர வெப்ப சலனம் மழை மேகங்கள் உருவாக ஏதுவான வானிலையை ஏற்படுத்தக்கூடும்.


இன்று கிழக்கு கடலோர பகுதியில் சில இடங்களில் கோடை மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. நாகப்பட்டினம் மற்றும் நெல்லூருக்கு இடைப்பட்ட கடலோர பகுதியில் ஒரு சில இடங்களில் மிதமான முதல் சற்றே பலத்த மழை பெய்ய கூடும். காற்றின் திசையை பொருத்து இந்த இடைப்பட்ட பகுதிகளில் நல்ல மழை பெய்யக்கூடும் சென்னை மற்றும் அதனை சுற்றி உள்ள பகுதிகளில் மழை பெய்யவும் வாய்ப்பு உள்ளது. இன்று முதல் இந்த வார இறுதி வரை சென்னைக்கு கோடை மழை பெய்ய ஏதுவான வானிலை நிலவக்கூடும்