டெல்டா மாவட்டங்களில் நேற்று மாலை பரவலான மழை

நேற்று மாலை டெல்டா மாவட்டங்களில் பல இடங்களில் மழை பெய்தது. காவேரி கரை ஓரம் வாழும் மக்களுக்கு ஆடி பெருக்கு என்பது காவேரி அன்னைக்கு செய்யும் மரியாதை நாள், இந்த புனித நாள் அன்று மழை பெய்தது அனைவருக்கும் மகிழ்ச்சி அளித்தது.

இன்று தமிழகத்தில் காலை மேக மூட்டமாக இருக்க கூடும், பகல் நேர வெப்பம் வட தமிழக பகுதிகளில் 36° அளவு இருக்க கூடும். தென் தமிழக பகுதிகளில் பகல் நேர வெப்ப நிலை 37° அளவு இருக்க கூடும்.

 

Weather_map

வட தமிழக கடலோர பகுதிகளில் ஓரிரு இடங்களில் வெப்ப சலனம் காரணமாக மாலை பொழுதில் மழை பெய்ய கூடும். இதன் காரணமாக சென்னையில் ஒரு சில இடங்களில் சாரல் மழை பெய்ய கூடும்