மேற்கு கடலோர பகுதிகளில் இன்றும் பலத்த மழை பெய்ய வாய்ப்பு

தென்மேற்கு பருவக்காற்று தீவிரம் அடைந்துள்ள நிலையில் இன்றும் மேற்கு கடலோர பகுதிகளில் பல இடங்களில் பலத்த மழை வாய்ப்பு உள்ளது.  மகாராஷ்டிரா முதல் கேரளா வரை கரை அருகே நிலவி வரும் அகடு மற்றும் வங்ககடல் பகுதியில் உள்ள குறைந்த காற்று அழுத்த தாழ்வு மண்டலம் காரணமாகவும் பருவக்காற்றில் நல்ல பலம் ஏற்பட்டுள்ளது. இதனால் பருவ மழை பல இடங்களில் பலமாக இருக்ககூடும்.

வங்ககடலில் உள்ள குறைந்த காற்று அழுத்த தாழ்வு மண்டலம் இன்று மேலும் வலுப்பெற்று அழ்ந்த காற்று அழுத்த தாழ்வு மண்டலமாக மாறி வங்க தேச கரையை கடக்க கூடும் என எதிர்பார்க்கபடுகிறது.  எனினும் கிழக்கு இந்திய பகுதிகளில் பருவக்காற்றின் ஏற்பட்டுள் தொய்வு மேலும் சில தினங்களுக்கு நீடிக்க கூடும் என எதிர்பர்க்காலம்.

மேற்கு கடலோர பகுதிகளை பொறுத்த வரை இன்றும் பல இடங்களில் பலத்த மழை பெய்ய வாய்ப்பு உள்ளது.  குறிப்பாக மும்பை மாநகர் இன்று பருவ மழையின் தொடக்கத்தை இன்று எதிர்பர்க்காலம்.  இதே போல் கொங்கன் கடலோர பகுதிகளில் ஒரு சில இடங்களில் மிக கன மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை படிவங்கள் கணிக்கின்றன.

தமிழகத்தை பொறுத்த வரை மழை வாய்ப்பு சற்று குறைவே, வட தமிழகத்தில் ஒரு சில இடங்களில் மழை பெய்யக்கூடும், காற்றின் வேகம் மிக அதிகமாக இருப்பதால் இடிமேகங்கள் வலுப்பெற வாய்புகள் குறைவு.  எனினும் இன்று முதல் வானிலையில் சற்று தெளிவு நிலவக்கூடும் என்பதால் அடுத்த சில தினங்களில் வெப்ப சலனம் காரணமாக ஏற்படும் இடி மேகங்கள் உருவாக வாய்ப்பு அதிகப்படும்.