தமிழகத்தில் ஓரிரு இடங்களில் வெப்ப சலனம் காரணமாக மழை வாய்ப்பு

கடந்த சில தினங்களாக தமிழகத்தில் வெப்ப நிலை பரவலாக இயல்பை விட அதிகரித்தே காணப்படுகிறது. நேற்று மதுரை மற்றும் திருத்தணி அகிய இடங்களில் பகல் நேர அதிகபட்ச வெப்ப நிலை 40° செல்சியஸ் அளவை தாண்டி பதிவானது.  கிட்டதட்ட ஒரு வாரம் கழித்து தமிழகத்தில் வெப்பம் 40 டிகிரி அளவை தாண்டியது.  வலுவான மேலைக்காற்று பகல் நேரத்தில் கடலில் இருந்து ஈரப்பதத்துடன் வரும் காற்றை வர விடாமல் முட்ட்கட்டை போட்டதால் வெப்ப நிலை மாலை வரை அதிகரித்தே காணப்பட்டு வந்தது.

 

இன்றும் வானிலை படிவங்கள் தமிழகத்தில் பரவலாக பகல் நேர வெப்ப நிலை இயல்பை விட ஓரிரு டிகிரி அதிகரித்தே காணப்படும் என கணிக்கின்றன.  எனினும் மேலைக்காற்று சற்று வலு குறைந்து இருக்கக்கூடும் என்பதால் கடற்காற்றின் ஊடுருவல் நிலத்தில் ஏற்பட வாய்ப்பு கடந்த சில தினங்களை விட அதிகரித்தே காணப்படுகிறது.

இதன் காரணமாக கடலோர தமிழகத்தில் சில இடங்களில் வெப்ப சலனம் காரணமாக மாலை நேர இடி மேகங்கள் உருவாக வாய்ப்பு உள்ளது.  இதனால் சில இடங்களில் மிதமான மழை பெய்யக்கூடும்.  மேலைக்காற்று மேல் அடுக்கில் இன்னும் ஓரளவுக்கு பலம் பெற்றே இருப்பதால் இந்த இடி மேகங்கள் வேகமா நகர்ந்து செல்லக்கூடும். இதனால் ஒரே இடத்தில பலத்த மழை பெய்ய வாய்ப்பு குறைவு.  காற்றின் திசைக்கு ஏற்றவாறு சென்னையின் சில புறநகர் பகுதிகளில் மழைபெய்யக்கூடும். நகரின் மத்திய பகுதிகளில் மழை வாய்ப்பு உள்ளது