தமிழகத்தில் பல இடங்களில் வெப்பசலனம் காரணமாக மழை, இன்றும் மழை பெய்ய வாய்ப்பு

நேற்று தமிழகத்தில் பல இடங்களில் பரவலாக மழை பதிவானது.  குறிப்பாக தஞ்சை, புதுக்கோட்டை, சிவகங்கை, கடலூர் மற்றும் மதுரை மாவட்டங்களில் பல இடங்களில் மிதமான மழை பெய்தது.  சென்னையில் அதன் வடக்கு மற்றும் மேற்கு புறநகர் பகுதிகளில் சில இடங்களில் ஓரளவுக்கு மழை பதிவானது.  அண்ணா நகரில் உள்ள எங்களது தானியங்கி வானிலை மையத்தில் 5 மிமீ அளவிற்கு நேற்று மாலை மழை பெய்தது.

நேற்று பரவலாக தெளிந்த வானிலை நிலவியது இடி மேகங்கள் உருவாக ஏதுவான சூழ்நிலையை உருவாக்கிய போதும் கடந்த சில தினங்களாக கடற்காற்று உடுருவ இயலாமல் இருந்த நிலையில் நேற்று கிட்டத்தட்ட 75 கிமீ அளவிற்கு நிலத்தில் ஊடுருவியது இந்த இடிமேகங்கள் உருவாக ஓர் முக்கிய காரணியாக இருந்தது என கூறுவது மிகை ஆகாது.

இன்றும் தமிழகத்தில் சில இடங்களில் வெப்பசலனம் காரணமாக மாலை நேரம் மழை பெய்ய வாய்ப்பு உள்ளது.  கேரளா மற்றும் கர்நாடகா ஒட்டிய மேற்கு கடலோர பகுதிகளில் பருவக்காற்று சற்று தொய்வு அடைந்துள்ளது இந்த வெப்பசலனம் ஏற்பட ஏதுவான நிலையை ஏற்படுத்திகிறது.  இன்று கடலோர ஆந்திரா மற்றும் உட்புற மகாராஷ்டிரம் பகுதிகளில் ஒரு சில இடங்களில் பலத்த மழை பெய்ய வாய்ப்பு உள்ளது.

தமிழகத்தை பொறுத்த வரை ஆந்திர பகுதிகளில் நிலவி வரும் காற்று சலனம் கணினி படிவங்கள் கணிப்பை விட சற்றே தெற்கில் நகர்ந்தால் சென்னை மற்றும் வட தமிழகத்தின் சில பகுதிகளில் மிதமான மழை பெய்ய நல்ல வாய்ப்பு ஏற்படும். எனினும் கடற்காற்று இன்றும் ஓரளவுக்கு பலம் பெற்று இருக்கக்கூடும் என்பதால் சென்னையின் மேற்கு பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடி மேகங்கள் உருவாக  வாய்ப்பு உள்ளது இது மேற்கில் இருந்து கிழக்காக செல்லும் பொது சென்னையில் சில பகுதிகளில் மழை பெய்யக்கூடும்