தமிழகத்தில் வறண்ட வானிலை

கடந்த வாரத்தின் துவக்கத்தில் தினமும் வெப்ப சலனம் காரணமாக மாலை மற்றும் இரவு நேரங்களில் பெய்த மழை கடந்த இரு தினங்களாக குறைந்து உள்ளது.

தமிழகத்தில் வறண்ட வானிலை மேலும் ஓரிரு தினங்களுக்கு தொடர கூடும். பகல் நேரங்களில் வெப்பத்தின் தாக்கம் சற்று அதிகமாக இருக்க கூடும். தமிழகத்தில் பல இடங்களில் பகல் நேர வெப்பம் 37° டிகிரி வரை எட்ட கூடும்.

Weather_Update_9_8
வட தமிழக கடலோர பகுதிகளில் ஓரிரு இடங்களில் வெப்ப சலனம் காரணமாக வேலூர், திருவண்ணாமலை மற்றும் அதனை சார்ந்த பகுதிகளில் மாலை / இரவு நேரங்களில் மிதமான மழை பெய்ய கூடும்.