தென் தமிழகத்தில் ஒரு சில இடங்களில் மழை வாய்ப்பு

கடந்த திங்கள் அன்று வட தமிழகம் மற்றும் டெல்டா மாவட்டங்களில் பரவலாக மழை பெய்த நிலையில் தமிழகத்தில் படிப்படியாக மழை குறைய ஆரம்பித்து உள்ளது. நேற்று தென் தமிழகத்தில் புதுக்கோட்டை, சிவகங்கை ஆகிய மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் மழை பதிவானது. இதே போல் திருவள்ளூர் மாவட்டத்திலும் ஒரு சில இடங்களில் மாலை வெப்ப சலனம் காரணமாக மிதமான மழை பதிவானது.  ஏனைய பகுதிகளில் மேகமூட்டமாக இருந்த போதிலும் மழை ஏதும் பெய்யவில்லை.

தென்மேற்கு பருவக்காற்று துவங்கி கிட்டத்தட்ட மூன்று வாரங்கள் ஆகிய நிலையில் இன்னும் ஓர் வேகம் இல்லாமலே இருந்து வருகிறது. இதன் காரணமாக தமிழகத்தில் தென்மேற்கு பருவ மழையின் காரணமாக நிரம்பும் அணைகள் அனைத்திலும் நீர் கொள்ளளவுகளில் எந்த குறிப்பிட்டு சொல்லும்படியான மாற்றம் ஏதும் மாற்றம் இல்லாமல் இருந்து வருகிறது.  காவேரி நீர் பிடிப்பு பகுதிகளில் உள்ள அணைகளிலும் இதே நிலை தான்.

இந்நிலையில் ஆற்று பாசனம் செய்யும் விவசாயிகள் சற்று பொறுமையாக இருப்பது உசிதம் ஆகும்.  தற்போது உள்ள நிலையில் அணைகள் அனைத்திலும் நீர் நிலை அதிகமாக சற்று நாள் பிடிக்கக்கூடும் எனவே அணை திறந்து பாசனம் செய்யவது என்பது பகற்கனவு போன்றதே.  மேலும் அரசு இந்த சமயத்தில் அணைகளின் கொள்ளளவுகளை அதிகரிக்க முயற்சி செய்வது உசிதம், அணைக்கு வரும் அணைத்து நீரையும் வெளியேற்றம் செய்யாமல் சேர்த்து வைத்தல் நீண்ட கால பயனை தரும்.

மழையை பொறுத்தவரை இன்றும் தென் தமிழகத்தில் சிவகங்கை, புதுக்கோட்டை, மதுரை ஆகிய பகுதிகளில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. இதே போல் வெப்ப சலனம் காரணமாக வட உட்புற பகுதிகளிலும் ஓரிரு இடங்களில் மழை வாய்ப்பு உள்ளது. இந்த இடிமேகங்கள் கரையை நோக்கி வரும் பொழுது கரையோர பகுதிகளில் மிதமான மழை பெய்யக்கூடும்.

வரும் நாட்களில் தமிழகத்தில் பரவலாக மழை குறைந்து விடும். மேற்கு கரையோர பகுதிகளில் பருவ மழை சற்று தீவிரம் அடையக்கூடும் என்பதால் வெப்ப சலனம் காரணமாக பெய்யக்கூடிய மழை வாய்ப்பு குறைந்து விடும்