வட தமிழக பகுதிகளில் மாலையில் மழை வாய்ப்பு

நேற்று நமது வலை பதிவில் கூறியது போல வட தமிழகத்தில் ஓரிரு இடங்களில் வெப்ப சலனம் காரணமாக மழை பெய்தது. வேலூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், மகாபலிபுரம் போன்ற பகுதிகளில் சற்று பலத்த மழை நிலவியது.

இன்று தென் இந்திய தீபகற்ப உட்புற பகுதிகளில் மேல் அடுக்கு காற்று நிலையற்ற தன்மை காரணமாக மழை வாய்ப்பு அதிகமாக உள்ளது. ராயல்சீமா, தென் கர்நாடக உட்புற பகுதிகள் மேல் அடுக்கில் காற்று பிளவு நிலவும் வாய்ப்பு உள்ளது, இது மேல் கூறிய நிலையற்ற தன்மையை உருவாக்க கூடும்.

Weather_map
இதன் காரணமாக வட தமிழக பகுதிகளில் மழை வாய்ப்பு மிக அதிகமாக உள்ளது. உட்புற பகுதிகளில் ஓரிரு இடங்களில் மாலை நேரம் கண மழை வாய்ப்பு நிலவுகிறது. சென்னை மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் பல இடங்களில் மழை பெய்ய கூடும்.