தமிழகத்தில் வெப்ப நிலை உயர்ந்து காணப்படும்

கடந்த ஓரிரு தினங்களாக தென்மேற்கு பருவ மழை தென் இந்திய தீபகற்பத்தின் தெற்கு பகுதிகளில் சற்று தொய்வு அடைந்துள்ளது,  இதன் காரணமாக நேற்று தமிழகத்தில் பரவலாக தெளிந்த வானிலை ஏற்பட்டு பகல் நேர வெப்ப நிலை சற்று அதிகரித்து காணப்பட்டது.  சென்னையின் இரு வானிலை மையங்களும் 38⁰ செல்சியஸ் அளவை தாண்டியது. இதே போல் கடலூரில் பகல் நேர அதிகபட்ச வெப்ப நிலை 39°செல்சியஸ் அளவை எட்டியது.

இன்றும் பரவலாக தமிழகத்தில் பகல் நேர வெப்ப நிலை இயல்பை விட அதிகரித்து காணப்படும் என வானிலை படிவங்கள் கணிக்கின்றன. குறிப்பாக தென் தமிழகத்தில் வெப்ப நிலை இயல்பை விட 3 / 4 டிகிரி அளவிற்கு அதிகரித்து காண வாய்ப்பு உள்ளது.  சென்னை போன்ற கடலோர பகுதிகளில் பிற்பகல் கடற்காற்று ஏற்பட்டு வெப்பத்தில் இருந்து ஒய்வு கோட்டுக்கும்.

மழையை பொறுத்த வரை கடந்த இரு தினங்களாக குறைந்து காணப்படும் நிலையே இன்றும் நீடிக்க வாய்ப்பு உள்ளது.  நேற்று கன்னியாகுமரி மாவட்டத்தில் எந்த இடத்திலும் குறிப்பிட்டு சொல்லும்படியான மழை பதிவு ஆகவில்லை. தென் தமிழகத்தில் மேற்கு தொடர்ச்சியை ஒட்டிய மலை பகுதிகளில் சொல்லி கொள்ளும்படியாக மழை ஏதும் பதிவாகவில்லை.  நீலகிரி மாவட்டம் கூடலூரில் 3 செ.மீ. அளவிற்கு மழை பதிவாகியது குறிப்பிடத்தக்கது.

இன்றும் தமிழகம் மற்றும் கேரள பகுதிகளில் பருவ மழை சற்று குறைந்தே காணப்படும், கொங்கன் மற்றும் வடக்கு கர்நாடக கடலோர பகுதிகளில் ஒரு சில இடங்களில் அவ்வப்போது பலத்த மழை பெய்ய வாய்ப்பு உள்ளது.  பருவ மழை குஜராத் பகுதியில் நிலவி வரும் குறைந்த காற்று அழுத்த தாழ்வு பகுதி காரணமாக அங்கு மற்றும் தெற்கு ராஜஸ்தான் பகுதிகளில்  பரவலாக மழை பெய்யக்கூடும்.