தமிழகத்தில் வெப்ப நிலை இயல்பை விட அதிகரித்து காணப்படும்

தமிழகத்தில் கடந்த சில தினங்களாக பகல் நேர வெப்ப நிலை இயல்பை விட அதிகரித்தே காணப்படுகிறது. குறிப்பாக தென் தமிழகம் மற்றும் கடலோர பகுதிகளில் சில இடங்களில் 3 / 4 டிகிரி செல்சியஸ் வரை அதிகரித்து பதிவாகி வருகிறது. கடந்த மூன்று / நான்கு தினங்களாக கடலூர், புதுவை நாகப்பட்டினம் ஆகிய பகுதிகளில் 38 / 39 டிகிரி அளவை ஒட்டி நிலவி வருகிறது.

தென் இந்தியாவின் தெற்கு பகுதிகளில் பருவக்காற்று சற்று தொய்வு அடைந்துள்ளதால் மேல் அடுக்குகளில் ஈரப்பதம் குறைந்தும் சற்றே மேகமூட்டம் குறைந்தும் உள்ளதால் பகல் நேர வெப்ப நிலை அதிகரித்து காணப்படுகிறது.  பருவக்காற்று தொய்வு அடைந்துள்ள போதிலும் மேலைக்காற்று பலம் நிலவி இருப்பதால் மாலை பொழுதில் கடற்காற்று ஊடுருவ இயலாமல் போகிறது வெப்ப நிலை மாலை நேரங்களில் சற்று உயர்ந்தே காண இதுவும் ஓர் காரணமாகும். இன்றும் தமிழகத்தில் பரவலாக வெப்ப நிலை சற்று அதிகரித்தே காணப்படும் என வானிலை படிவங்கள் கணிக்கின்றன.

மேற்கு கடலோர பகுதிகளில் கொங்கன் மற்றும் மகாராஷ்டிரா பகுதிகளில் பரவலாக மழை பெய்ய வாய்ப்பு உள்ளது.  சில இடங்களில் பலத்த மழை பெய்யக்கூடும். கேரளா மற்றும் கடலோர கர்நாடகா பகுதிகளில் மிதமான மழை வாய்ப்பு உள்ளது ஓரிரு இடங்களில் சற்றே கனத்த மழை பெய்யக்கூடும்.

தமிழகத்தை பொறுத்த வரை தெற்கு பகுதிகளில் கடற்காற்று ஊடுருவல் காரணமாக ஏற்படும் சலனம் இன்று மதியம் . மாலை நேரங்களில் இடி மேகங்களை உருவாக்க வாய்ப்பு உள்ளது.  இதன் காரணமாக புதுக்கோட்டை / சிவகங்கை ஆகிய பகுதிகளில் சில இடங்களில் மழை வாய்ப்பு உள்ளது.  இதே போல் மத்திய மற்றும் வடக்கு கடலோர பகுதிகளில் ஓரிரு இடங்களில் வெப்ப சலனம் காரணமாக மழை வாய்ப்பு உள்ளது.  மேற்கு தொடர்ச்சியை ஒட்டிய பகுதிகளில் ஒரு சில இடங்களில் மிதமான மழை பெய்யக்கூடும்.