வங்காள விரிகுடாவில் குறைந்த காற்று அழுத்த நிலை

வங்க கடலில் ஓடிஷாவை ஒட்டிய கடல் பகுதியில் குறைந்த காற்று அழுத்த நிலை உருவாகி உள்ளது.

இதன் காரணமாக பருவ காற்று தாழ்வு நிலை தென் கிழக்காக சாய்ந்து உள்ளது.  இது மத்திய இந்திய மற்றும் டெக்கண் பீடபூமியின் உட்புற பகுதிகளில் மழை வாய்ப்பை அதிகரித்து உள்ளது.

கடலோர ஆந்திரா, தெலங்காணா, சத்திஸ்கர், மத்திய பிரதேசம் ஓடிஷா ஆகிய பகுதிகளில் அடுத்த ஓரிரு நாட்களுக்கு பலத்த மழை பெய்ய கூடும். மேற்கு கடலோர பகுதிகள் மற்றும் அதனை சார்ந்த மராத்வாடா, வட கர்நாடக உட்புற பகுதிகளிலும் சில இடங்களில் கண மழை இருக்க கூடும்.

Weather_Update

இந்த குறைந்த காற்று அழுத்த தாழ்வு நிலை காரணமாக தமிழக பகுதிகளில் மழை வாய்ப்பு குறைந்து விடும்.  அடுத்த ஓரிரு நாட்களுக்கு மேக மூட்டமாக வானிலை இருக்க கூடும், மழை வாய்ப்பு ஓரிரு இடங்களில் அமைய கூடும் ஆனால் கண மழை / பரவலான மழை பெய்யும் வாய்ப்பு குறைவாகவே இருக்கும்.  இந்த வார இறுதி வரை இந்நிலை நீடிக்க கூடும்.