தென்மேற்கு பருவமழையும் ஆடி மாதமும் – ஓர் தொடர்பு

நேற்று ஆடி மாதம் துவங்கியது, பண்டைய காலத்தில் ஆடி முதல் மார்கழி வரை தக்ஷிணாயனம் என்பார்கள்.  வட துருவத்தில் மேல் உள்ள சூரியன் நேற்று முதல் தென் துருவத்தை நோக்கி தனது பயணத்தை துவக்குகிறது.  நாம் முன்பே கூறியுள்ளோம் பருவகாலம் என்பது சூரியனை பின் தொடர்ந்து செல்லும் ஓர் நிகழ்வாகும்.  வட துருவத்திற்கு சூரியன் வந்த போது அதனை பின் தொடர்ந்து தென்மேற்கு பருவகாலம் வருகிறது.  இதே போல் தென் துருவத்தை நோக்கி செல்லும் பொது பருவகாலம் பின் தொடர்ந்து செல்லும் போது ஏற்படுவது வடகிழக்கு பருவகாலம்.

தமிழில் ஆடி மாதம் மாற்றும் வானிலையை தொடர்பிட்டு பல பழமொழிகள் நிலவி வருகின்றன இந்த பதிவின் மூலம் நாங்கள் இந்த பழமொழிகளின் காரணிகள் சிலவற்றை காட்டி உள்ளோம்.

‘ஆடிக்காற்றில் அம்மியும் நகரும்’ என்பது வழக்கில் உள்ள ஓர் வாக்கியம். கோடைகாலத்தில் ஏற்படும் வெப்பம் காரணமாக அம்மை போன்ற நோய்கள் அதிகரிக்கின்றன ஆடி மாதத்தை ஒட்டி தென்மேற்கு பருவக்காற்று நல்ல பலம் பெற்று சற்றே ஈரப்ததுடன் வரும் மேலைக்காற்று வெப்பத்தை குறைத்து அம்மை போன்ற நோய்கள் ஏற்பட நிலவி வந்த ஏதுவான சூழ்நிலையை களைத்து விடுகிறது.  ஆடிக்காற்றில் அம்மையும் பறந்து போகும் என்பதே காலபோக்கில் அம்மியும் பறந்து போகும் என மாறியது.

இதேபோல் நமது அணைத்து முக்கிய ஆறுகளிலும் இந்த சமயத்தில் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய நீர் பிடிப்பு பகுதிகளில் ஏற்படும் நல்ல மழை காரணமாக தண்ணீர் அதிகரிக்கும்.  முன்பு அணைகள் இல்லாத நிலையில் வெள்ள பெருக்கும் ஏற்படக்கூடிய சூழலை ஏற்படுத்தியது. இதனால் ஆடிப்பெருக்கு பண்டிகை நாம் பண்டைய தமிழர்கள் கொண்டாடி மகிழ்ந்தனர்.  “ஆடி பட்டம் தேடி விதை” என்ற பழமொழி ஏற்படவும் இதுவே காரணி.  ஆற்று பாசனம் நிலவி வந்த காலத்தில் ஆடி மற்றும் அதனை பின் தொடர்ந்து வந்த காலங்களில் ஆறுகளில் நீர் அளவுகள் அதிகரித்தே நிலவி வந்தன.   இது விவசாயம் செய்ய எதுவாக இருந்தது