தமிழகத்தில் தொடர்ந்து சுட்டெரிக்கும் சூரியன்

தமிழகத்தில் கடந்த சில தினங்களாக பகல் நேர வெப்ப நிலை இயல்பை விட அதிகரித்தே காணப்படுகிறது. வெள்ளி அன்று கடலூரில் அதிகபட்ச வெப்ப நிலையாக 40.7° செல்சியஸ் பதிவானது. இது ஜூலை மாதத்தில் கடலூரில் இதுவரை பதிவான அதிகபட்ச வெப்ப நிலையாகும். 1895ஆம் ஆண்டு ஜூலை மாதத்தில் பதிவான 40.6° செல்சியஸ் கடலூரில் நேற்று முன் தினம் வரை இருந்த அதிகபட்ச வெப்ப நிலை.

இதே போல் மதுரையில் கடந்த இரு தினங்களாக பகல் நேர வெப்ப நிலை 40° செல்சியஸ் அளவை தாண்டியே பதிவாகி வருகிறது, வானிலை படிவங்களை நோக்கினோம் எனில் இன்றும் மதுரையில் பகல் நேர அதிகபட்ச வெப்ப நிலை 40° செல்சியஸ் அளவை தாண்ட அதிக வாய்ப்பு உள்ளது.

சாதரணமாக தென்மேற்கு பருவ மழை மேற்கு கரையோர பகுதிகளில் பரவலாக நிலவி வரும் சமயங்களில் தமிழகத்தில் வெப்ப நிலை குறைந்தே காணப்படும்.  வளிமண்டலத்தில் அதிக ஈரப்பதம் இருப்பதால் வெய்யில் தாக்கம் தரை பகுதிகளில் குறைவாகவே ஏற்படுகிறது.  ஆனால் கடந்த சில தினங்களாக கேரள பகுதியில் பருவ மழை குறைந்து விட்டது, மேல் நிலை காற்றின் ஈரப்பதம் குறைந்து உலர்ந்த நிலை இருப்பதால் வெய்யில் தாக்கம் அதிகமாக தமிழகத்தில் பரவலாக நிலவி வருகிறது.

இன்றும் தமிழகத்தில் பரவலாக வெப்ப நிலை இயல்பை விட 2 / 3° செல்சியஸ் அளவிற்கு அதிகமாவே இருக்கும் என வானிலை படிவங்கள் கணிக்கின்றன குறிப்பாக தெற்கு மற்றும் உட்புற தமிழகத்தின் சில பகுதிகளில் இயல்பை விட 3 / 4° செல்சியஸ் வரை அதிகரித்து நிலவ வாய்ப்பு உள்ளது. பரவலாக வறண்ட வானிலை நீடிக்கும் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய பகுதிகளில் கன்னியாகுமரி மாவட்டத்தின் ஓரிரு இடங்களில் சாரல் மழை இருக்க வாய்ப்பு.  வெப்ப சலனம் காரணமாக கடலோர பகுதிகளில் ஓரிரு இடங்களில் மாலை நேரம் மழை பெயய்க்கூடும்