தமிழகத்தில் வெப்ப சலனம் காரணமாக மழை வாய்ப்பு

தமிழகத்தில் தொடர்ந்து வெப்பத்தின் தாக்கம் நீடித்து வருகிறது. நேற்று மதுரை விமான நிலைய வானிலை மையம் அதிகபட்ச வெப்பமாக 42°செல்சியஸ் அளவை எட்டியது.  கடந்த ஆறு தினங்களாக மதுரையில் பகல் நேர வெப்ப நிலை 40°செல்சியஸ் அளவை தாண்டி வருகிறது, இன்றும் தாண்ட வாய்ப்பு உள்ளது.

இந்நிலையில் வானிலை படிவங்கள் தற்பொழுது நீடித்து வரும் வெப்பத்தின் தாக்கம் மேலும் சில தினங்கள் நீடிக்கக்கூடும் என கணிக்கின்றன.  இயல்பை விட 2 / 3 டிகிரி அளவிற்கு அதிகரித்தே பரவலாக காணப்படும்.  தென் தமிழகத்தில் வெப்பத்தின் தாக்கம் அதிகமாக இருக்கும்.

எனினும் வெப்ப சலனம் காரணமாக ஏற்படும் மழை வாய்ப்பு படிப்படியாக அதிகரிக்கக்கூடும் என வானிலை படிவங்கள் கணிக்கின்றன நேற்று சென்னையில் சில பகுதிகளில் பலத்த மழை பதிவானது.  மீனம்பாக்கம் பகுதியில் 36 மிமீ அளவிற்கும் தரமணி பகுதியில் 33 மிமீ அளவிற்கும் மழை பதிவானது.

இன்றும் தமிழகத்தின் சில இடங்களில் வெப்ப சலனம் காரணமாக மழை பெய்ய வாய்ப்பு உள்ளது.  குறிப்பாக வட தமிழகத்தில் புதுவை மற்றும் தென் ஆந்திரவில் ஸ்ரீஹரிக்கோட்டா இடையே மழை பெய்யக்கூடும் என வானிலை படிவங்கள் எதிர்பார்கின்றன. நேற்று போல் இன்றும் சென்னை மற்றும் அதனை சுற்றி உள்ள பகுதிகளில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. எனினும் இடி மேகங்கள் எங்கு உருவாகின்றன மற்றும் காற்றின் திசையை பொருத்து மழை பெய்யும் வாய்ப்பு மாறக்கூடும்.