டெல்டா மாவட்ட பகுதிகளில் பரவலாக மழை – இன்றும் தமிழகத்தில் மழை தொடர வாய்ப்பு

கடந்த சில தினங்களாக தமிழகத்தில் வெப்ப சலனம் காரணமாக ஏற்படும் மழை படிப்படியாக அதிகரித்து வருகிறது. சென்னையில் சில பகுதிகளில் புதன் அன்று நல்ல மழை பதிவானது.  நேற்று டெல்டா மாவட்ட பகுதிகளில் பல இடங்களில் நல்ல மழை பதிவானது.  இதே போல் காஞ்சிபுரம் மற்றும் திருவண்ணாமலை மாவட்டத்திலும் சில பகுதிகளில் மிதமான மழை பதிவானது.

நாகப்பட்டினம் மாவட்டம் திருமருகள், குத்தாலம் மற்றும் நாகப்பட்டினம், அரியலூர் மாவட்டம் செந்துறை, தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள திருப்பனந்தாள் மற்றும் ஆடுதுறை , திருவாரூர் மாவட்டம் குடவாசல் மற்றும் கடலூர் மாவட்டம் நெய்வேலி ஆகிய பகுதிகளில் நல்ல மழை பதிவானது.

வானிலை படிவங்கள் இன்றும் தமிழகத்தில் பல இடங்களில் வெப்ப சலனம் காரணமாக மழை வாய்ப்பு இருப்பதாக கணிக்கின்றன. மேல் அடுக்கில் ஏற்படும் காற்று குவிதல் வளிமண்டலத்தில் ஓர் ஸ்திரமற்ற நிலையை ஏற்படுத்தி உள்ளது.  தற்பொழுது இயல்பை விட அதிகமாக நீடித்து வரும் வெப்பம் இந்த ஸ்திரமற்ற நிலை காரணமாக இடி மேகங்கள் உருவாக ஏதுவான சூழ்நிலையை ஏற்படுத்தி வருகிறது.  இதனால் அடுத்த சில தினங்களுக்கு தமிழகத்தில் பரவலாக மழை வாய்ப்பு உள்ளது.  இன்றும் வட தமிழகத்தின் ஒரு சில பகுதிகளில் மிதமான முதல் சற்றே பலத்த மழை பெய்ய வாய்ப்பு உள்ளது.