தென்மேற்கு பருவமழை – ஆகஸ்ட் 20 வரை ஓர் தொகுப்பு

தென்மேற்கு பருவ மழையை பொறுத்த வரை தமிழகம் ஓர் மழை மறைவு பகுதி என்பது அனைவரும் அறிந்ததே.  தமிழகத்தில் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய நீலகிரி, கன்னியாகுமரி மாவட்டங்கள் மற்றும் கோவை, திருநெல்வேலி மாவட்டத்தில் சில பகுதிகள் மட்டுமே நேரடியாக மழை பெரும் பகுதிகள் ஆகும், ஏனைய அணைத்து மாவட்டங்களும் பரவலாக வெப்ப சலனம் (convective rains) காரணமாகவே மழை பெற்று வரும்.

எப்போதெல்லாம் தென்மேற்கு பருவக்காற்றில் தொய்வு ஏற்படுகிறதோ அப்போதெல்லாம் வெப்ப சலனம் காரணமாக கிழக்கு கடற்கரை பகுதிகளில் ஏற்படும் மழை அதிகரிக்கிறது. இந்த ஆகஸ்ட் மாதம் முதலில் இருந்து தொய்வு நிலையில் இருந்து வந்தது, இதே நேரத்தில் தமிழகத்தில் பரவலாக இடி மேகங்கள் காரணமாக பல இடங்களில் நல்ல மழை பெய்தது.  திருவண்ணாமலை மாவட்டத்தில் செங்கம் இந்த மாதம் பருவ மழை அதிகம் பெய்யும் சின்ன கள்ளார் பகுதியும் கிட்டத்தட்ட ஒரே அளவு மழை பெற்றுள்ளது பருவமழையில் ஏற்பட்டுள்ள தொய்வும், வெப்ப சலன மழை அதிகரித்ததை தெளிவாக எடுத்துரைக்கிறது

நேற்றை நிலைப்படி தமிழகம் மற்றும் புதவை வானிலை துணை பகுதியை இயல்பை விட 35% அதிகம் பெற்றுள்ளது.  எனினும் நீலகிரி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்கள் பற்றாக்குறை நிலையை சந்தித்து வருவது வருத்தம் அளிக்ககூடிய நிகழ்வாகும். கடந்த இரண்டு ஆண்டுகளாக பற்றாக்குறை மழை சந்தித்துள்ள இவ்விரு மாவட்டங்களும் மீதம் உள்ள 45 நாட்களில் இந்த பற்றாக்குறையை ஈடுகட்ட அதிக வாய்புகள் கிடைக்குமா என்பது கேள்விக்குறியே.

This slideshow requires JavaScript.

மேலே அதிகம் மற்றும் குறைந்த மழை பெற்றுள்ள மாவட்டங்கள், பிராந்திய வாரியாக மாவட்டங்களில் பெய்துள்ள மழை அளவு ஆகியவை படவில்லைக் காட்சியாக கொடுக்கப்பட்டுள்ளது