உட்புற தமிழகத்தில் பரவலான மழை

கடந்த இரு தினங்களாக தமிழ் நாட்டின் பல பகுதிகளில் பரவலான மழை பெய்து வருகிறது. நேற்று முன் தினம் திருவண்ணாமலை, வேலூர் மற்றும் தருமபுரி மாவட்டங்களில் பல இடங்களில் கண மழை பெய்தது.  நேற்று இரவு டெல்டா மாவட்டங்களில் நல்ல மழை பெய்தது.

Weather_Update_17_8_2

இந்த மழை மேலும் சில தினங்களுக்கு தொடர கூடும்.  தென் மேற்கு வங்க கடலில் உருவாகி உள்ள மேல் அடுக்கு காற்று சுழற்சி தென் இந்தியாவின் உட்புற பகுதிகளின் வளி மண்டலத்தில் நிலையற்ற தன்மை உருவாக்கி உள்ளது இதன் காரணமாக தென் கர்நாடக, ராயல்சீமா மற்றும் தமிழகத்தின் உட்புற பகுதிகளில் மழை பெய்யும். குறிப்பாக மேற்கு தொடர்ச்சி மலை ஒட்டிய பகுதிகளில் கண மழை பெய்ய வாய்ப்பு உள்ளது.

Weather_Update_17_8_1

இந்த மேல் அடுக்கு காற்று சுழற்சி மேற்கு வடமேற்கு திசையில் நகர்ந்து அரபிக்கடல் பகுதியை அடையும்.  இதன் காரணமாக கேரளாவின் பல பகுதிகளில் அடுத்த ஓரிரு தினங்களுக்கு பரவலான மழை பெய்ய கூடும்.