சென்னையில் நள்ளிரவில் கண மழை – மேலும் தொடர வாய்ப்பு

கடந்த சில தினங்களாக காணாமல் போயிருந்த மழை வட தமிழக பகுதிகளில் மீண்டும் பெய்ய ஆரம்பித்துள்ளது.  சென்னையில் நல்ளிரவில் பல பகுதிகளில் கண மழை பெய்தது.

மேல் அடுக்கில் ஏற்பட்டுள்ள காற்று குவிதல் காரணமாக தென் இந்தியாவின் உட்புற பகுதிகளில் பல இடங்களில் நல்ல மழை பெய்தது. குறிப்பாக ராயல்சீமா, தென் கர்நாடகம், வட தமிழக பகுதிகளில் இந்த மழை பரவலாக பெய்தது.

Weather_Update_21_8

இந்த நிலை மேலும் ஓரிரு தினங்களுக்கு நீடிக்க கூடும். இதன் காரணமாக சென்னை மற்றும் அதனை ஒட்டி உள்ள வட தமிழக கடலோர பகுதிகளில் வெள்ளி அன்று நல்ல மழை வாய்ப்பு உள்ளது. சில இடங்களில் மிக கண மழை பெய்ய கூடும். வியாழன் அன்று மழை பெய்த இடங்களில் இருந்து வெள்ளி அன்றும் மழை பெய்ய கூடிய இடங்கள் சற்றே தெற்கில் இருக்க கூடும்.

மறவாது இன்று தங்களது குடையை எடுத்து செல்லுங்கள்.