தமிழகத்தில் வெப்ப சலன மழை அடுத்த சில தினங்களுக்கு குறைந்து காண வாய்ப்பு

தமிழகத்தில் இந்த ஆகஸ்ட் மாதம் பரவலாக நல்ல மழை தந்துள்ளது.  தென்மேற்கு பருவ காற்றில் ஏற்பட்ட தொய்வு காரணமாக கடந்த ஓர் மாதமாக மாலை நேர வெப்ப சலன மழை பெய்து வந்தது.  குறிப்பாக வட தமிழகத்தில் திருவண்ணாமலை, காஞ்சிபுரம் மாவட்டங்களில் இயல்பை விட மிகவும் அதிகமாகவே மழை பெய்தது.  தமிழகத்தில் தற்போதைய நிலைப்படி கன்னியாகுமரி மற்றும் நீலகரி மாவட்டங்கள் தவிர ஏனைய அணைத்து மாவட்டங்களும் சாராசரி அல்லது அதற்கும் அதிகமாக மழை பெற்று உள்ளது.

தற்பொழுது வங்ககடலில் ஓடிஸா கரை அருகே ஏற்பட்டுள்ள குறைந்த காற்று அழுத்த தாழ்வு பகுதி காரணமாக தென்மேற்கு பருவக்காற்று மீண்டும் சற்று பலம் பெறக்கூடும்.  இதனால் மத்திய இந்தியா மற்றும் மேற்கு கடலோர பகுதிகளில் மீண்டும் மழை துவங்கக்கூடும்.  இதே போல் தமிழகத்தில் மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகள் மற்றும் கன்னியாகுமரி மாவட்ட பகுதிகளில் சாரல் மழை பெய்ய வாய்ப்பு உள்ளது.

தென்மேற்கு பருவ மழை தீவிரம் அடைவதால் வெப்ப சலனம் காரணமாக உட்புற மற்றும் கடலோர தமிழக பகுதிகளில் கடந்த பல நாட்களாக பெய்து வந்த மாலை / இரவு நேர மழை குறைந்து விடும்.  மேலைக்காற்று வலு பெறுவதால் இடிமேகங்கள் நன்கு வலுப்பெற வாய்ப்புகள் குறைந்து விடுகிறது. இதே போல் வளிமண்டலத்தில் காற்றின் ஈரப்பதம் அதிகரிப்பதால் பகல் நேர வெப்ப நிலை குறைந்து இருக்கும் இதுவும் இடி மேகங்கள் உருவாக ஏதுவான நிலை இல்லாமல் ஏற்படுத்தி விடுகிறது. அடுத்த சில தினங்களுக்கு தமிழகத்தில் பரவலாக இந்த நிலை நீடிக்கும் என வானிலை படிவங்கள் கணிக்கின்றன.