தமிழத்தில் பரவலாக மழை பொழிய வாய்ப்பு.

நேற்று மாலை மேற்கு உட்புற மாவட்டங்கள் மற்றும் அதனை சார்ந்த பெங்களுறு ஆகிய இடங்களில் மழை பொழிந்தது. பெங்களுறு, சேலம் ஹருர் போன்ற நகரங்களில் கண மழையுடன் ஆலங்கட்டி ஏற்பட்டது. இன்று மழை பொழிய வாய்ப்பு உண்டா? எங்கு மழை ஏற்படும்?

வானிலையில் ஏற்பட்டுள்ள நிலையற்ற தன்மை காரணமாக தமிழ்நாட்டில் பரவலாக மழை பொழிய வாய்ப்பு உருவாகி உள்ளது. கீழ் நிலையில் ஏற்பட்டுள்ள காற்று பிளவு கோடு (LWD) மற்றும் இரு வேறு நிலையில் உள்ள வளித்தின்மம் (Airmass) சந்திக்கும் நிலை காரணமாக மதியம் தொடங்க கூடிய மழை இரவு கீழ் இறங்கும் மேற்கத்திய தாக்கம் மூலம் வலுப்பெரும்.

Weather_map_blingual

இதில் கவனம் கொள்ள வேண்டிய ஒன்று, மழை ஒரே நேரத்தில் பரவலாக பொழியாமல் வெவ்வேறு நேரங்களில் இளயராஜாவின் சங்கீத ஸிம்போனி போன்று ஆங்காங்கே நேரம் கூடும் போது ஜதி சேர்த்து கொள்ளும்.

பெங்களுறு, சேலம், வேலூர் மற்றும் அதனை சுற்றி உள்ள பகுதிகளில் இன்று கண மழை பொழிய வாய்ப்பு உள்ளது

சென்னையை பொருத்த வரை இரவு பொழுதே மழை அதிகம் பெய்ய வாய்ப்பு உள்ளது. நாம் சற்று பொறுமை காத்து இருக்க வேண்டி வரும். இன்று இரவு அல்லது நாளை விடியற்காலை சென்னை நகரம் மழையுடன் தனது சந்திப்பை நிறைவேற்றும்.

gfs_apcpn_ind_13